Home
News

பழையபடி ரூ.300 பட்ஜெட்டில் புது பிளான்.. Jio, Airtel கண்களில் விரலை விட்டு ஆட்டும் Vodafone.. எந்த திட்டம்?

ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Airtel) ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் அதன் "நான்ஸ்டாப் ஹீரோ" போர்ட்ஃபோலியோவின் கீழ், பட்ஜெட் நுழைவு நிலை திட்டங்கள் மற்றும் நீண்ட கால வரம்பற்ற டேட்டா பேக்குகளை கொண்டு வந்துள்ளது.

என்ட்ரி லெவலில், வோடபோன் ஐடியா ரூ.325 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 28 நாட்கள் செல்லுபடியுடன் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், 10ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. அதிக விலை கொண்ட பேக்குகளை வாங்காமல், அடிப்படை இணைப்பை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு நேரடியான தேர்வாக அமையும்.

பழையபடி ரூ.300 பட்ஜெட்டில் புது Vodafone பிளான்!

இருப்பினும், இந்த தொகுப்பில் உள்ள டேட்டா தீர்ந்தவுடன், ஒரு மெகாபைட்டிற்கு 50 பைசா வீதம் பயனர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும். இது அதிக டேட்டாவை பயன்படுத்தும் பயனர்களுக்கு விலை உயர்ந்ததாக இருக்கலாம். இதோடு வோடபோன் ஐடியா தனது நீண்ட கால செல்லுபடியாகும் போர்ட்ஃபோலியோவை புதிய "நான்ஸ்டாப் ஹீரோ" திட்டங்களுடன் விரிவுபடுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் ரூ.2099 திட்டமானது, 180 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன், வரம்பற்ற குரல் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் நாள் முழுவதும் வரம்பற்ற டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இதேபோன்ற நன்மைகள் - ரூ.2180 விலையில், தமிழ்நாடு மற்றும் சென்னையில் உள்ள பயனர்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.2180 திட்டமும் அதே நன்மைகளை கொண்டிருந்தாலும், பிராந்திய கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது (குறிப்பாக விலை). மேலும், பயனர்கள் - விலை விருப்பங்களை பொறுத்து பல தேர்வுகளை கொண்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில், வி நிறுவனமானது தனது முந்தைய ரூ.1749 மற்றும் ரூ.2399 திட்டங்களையும் 180-நாள் செல்லுபடியாகும் காலத்துடன் தக்கவைத்துள்ளது.

மேலும் வோட போன் ஐடியா, அதன் முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதலாக, ரூ.44 கிரிக்கெட் டேட்டா ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக் ஒரு நாள் செல்லுபடியுடன் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைலுக்கான 28 நாள் சந்தாவையும் உள்ளடக்கியுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் வளர்ந்து வரும் ஒரு போக்கை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது; இதில் ஆபரேட்டர்கள் திட்டத்தை இன்னும் அதிக மதிப்புள்ளதாக மாற்ற கன்டென்ட் சேவைகளை இணைத்து வழங்குகின்றனர்.

வி-யின் புதிய திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், "நாள் முழுவதும் வரம்பற்ற டேட்டா" என்ற வாக்குறுதி தானன். வழக்கமான "டெய்லி டேட்டா லிமிட்" திட்டங்களை போலல்லாமல், இந்த பேக்குகள் பயனர்கள் ஒரு நாளைக்கு நிலையான வரம்பு இல்லாமல் டேட்டாவை பயன்படுத்த அனுமதிக்கின்றன. இருப்பினும், இதில் ஒரு நிபந்தனை உள்ளது.

5ஜி வசதி கொண்ட டிவைஸ்களை கொண்ட சந்தாதாரர்கள், வி நிறுவனத்தின் ஆக்டிவ் 5ஜி கவரேஜ் இருக்கும் பகுதிகளில் மட்டுமே வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பெற முடியும். 5ஜி இன்னும் அறிமுகப்படுத்தப்படாத பகுதிகளில், பயனர்கள் 4ஜி நெட்வொர்க்குகளையே நம்பியிருக்க வேண்டும், அங்கு செயல்திறனும் மாறுபடலாம்.

இது ஒரு முக்கியமான வேறுபாடு ஆகும், குறிப்பாக போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது! ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டும் இந்தியா முழுவதும் தங்கள் 5ஜி சேவையை தீவிரமாக விரிவுபடுத்தியுள்ளன, இதனால் வரம்பற்ற டேட்டா என்ற வாக்குறுதியை வழங்குவதில் "நெட்வொர்க்கின்" கிடைக்கும் தன்மையும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது!

Best Mobiles in India

English summary
Vodafone Idea introduced New plan Rs 325 With 10GB Data make more changes in its prepaid Portfolio
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X