Home
News

மொத்தமா ஃப்ரீ.. 1 வருட வேலிடிட்டி.. 730 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. வோடபோனின் சுதந்திர தின ஆஃபர்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் 1 வருடம் வேலிடிட்டி கொண்ட ரூ.3099 திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில், வோடபோன் நிறுவனம், மூக்கில் விரல் வைக்கும்படியான சலுகைகளை அறிவித்துள்ளது.

மொத்தமா ஃப்ரீ.. 1 வருட வேலிடிட்டி.. 730ஜிபி டேட்டா.. வோடபோன் ஆஃபர்!

இன்று (ஆகஸ்ட் 12) முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையில் விஐ ஆப் (VI App) மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளை பெற முடியும். அதாவது, இந்த சலுகை நாட்களில் ரூ.199க்கும் மேல் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

அதேபோல ரூ.1,449 திட்டத்துக்கு ரூ.50 தள்ளுபடியும், ரூ.3,099 திட்டத்துக்கு ரூ.75 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, ஸ்பின் தி வீல் (Spin The Wheel) கண்டெஸ்ட் மூலம், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு வருட வேலிடிட்டி கொண்ட ரூ.3,099 திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கண்டெஸ்ட் விஐ ஆப்பில் நடக்கிறது. இந்த நேரத்தில் ரூ.3,099 திட்டம் குறித்து தெரிந்து கொள்வோம்.

வோடபோன் ஐடியா ரூ.3,099 திட்ட விவரங்கள் (Vodafone Idea RS 3099 Plan Details): இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS), ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் (OTT Subscription), கூடுதலாக 50 ஜிபி ப்ரீ டேட்டா போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

அதோடு, பின்ச் ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஒரு வருட வேலிடிட்டி கிடைக்கும். இந்த 356 நாட்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் செய்து கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளலாம். அதற்கு மேல் அனுப்பினால், லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 1 ரூபாயும், எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு 1.5 ரூபாயும் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரையில் நீங்கள் பின்ச் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த டேட்டா உங்களது திட்டத்தின் டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. அதேபோல வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை மூலம் திங்கள் முதல் வெள்ளி வரையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 ஜிபி டேட்டாவை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றால், அதை சனி மற்றும் ஞாயிறுகளில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் டோட்டா டிலைட்ஸ் சலுகை மூலம் பேக்கப் டேட்டாவாக மாதம் மாதம் 2 ஜிபி இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மொபைல் சப்ஸ்கிரிப்ஷனை பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் விஐ மூவிஸ் மற்றும் டிவி விஐபி (Vi Movies & TV VIP) சலுகையும் கிடைக்கிறது.

குறிப்பாக, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போதே, 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுவது, வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படி ஏராளமான சலுகைகளை கொண்ட இந்த திட்டத்தை வோடபோன் ஐடியா நிறுவனம் ஸ்பின் தி வீல் கண்டெஸ்ட் மூலம், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Independence Day Offers 2023 For Prepaid Customers on Vi App With Rs 3099 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X