Home
News

அள்ளி தந்த Vodafone Idea.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. OTT.. புதிய திட்டங்கள் அறிமுகம்..

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக அவ்வப்போது புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது வோடபோன் ஐடியா (vodafone idea) நிறுவனம். தற்போது இந்நிறுவனம் இரண்டு அசத்தலான புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது வோடபோன் ஐடிய நிறுவனம் ஓடிடி சந்தா வழங்கும் ரூ.998 மற்றும் ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அள்ளி தந்த Vodafone Idea..  OTT.. புதிய திட்டங்கள் அறிமுகம்..

வோடபோன் ஐடியா ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம் ( Vodafone Idea Rs 998 Prepaid Plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 105ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை (Netflix Basic subscription) வழங்குகிறது இந்த திட்டம்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அட்டகாசமான வோடபோன் ஐடியா ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக ஓடிடி மற்றும் அதிக நன்மைகளுடன் இந்த திட்டம் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

அள்ளி தந்த Vodafone Idea..  OTT.. புதிய திட்டங்கள் அறிமுகம்..

வோடபோன் ஐடியா ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 1399 Prepaid Plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் 84 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை (Netflix Basic subscription) வழங்குகிறது இந்த திட்டம்.

மேலும் வோடபோன் ஐடியா ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டம் பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) சலுகை மூலம் அன்லிமிடெட் நைட் டேட்டா(Unlimited Night Data) சலுகை வழங்குகிறது. இதற்குக் கூடுதல் கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இதுதவிர வோடபோன் ஐடியா ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையை வழங்குகிறது. இதன் மூலம் வார நாட்களில் மீதம்விட்ட டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான வோடபோன் ஐடியா ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக வோடபோன் ஐடியா அறிமுகம் செய்துள்ள ரூ.998 மற்றும் ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.904 விலையில் ஒரு திட்டத்தைச் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

அள்ளி தந்த Vodafone Idea..  OTT.. புதிய திட்டங்கள் அறிமுகம்..

வோடபோன் ஐடியா ரூ.904 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 904 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த புதிய ரூ.904 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 180ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் இதில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

இதுதவிர அமேசான் பிரைம் லைட் சந்தா, பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) சலுகை, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.904 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea has introduced two prepaid plans to purchase Netflix subscriptions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X