Vi அறிமுகம் செய்த மலிவான திட்டம்.. இனி அனைவருக்குமான பெஸ்டான திட்டம் இது தானா?
வோடபோன் ஐடியா (Vi) சமீபத்தில் அதன் பயனர்களுக்காகப் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வந்தது. அந்த வரிசையில் இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில் தனது திட்டப் பட்டியலில் இருந்து மிகவும் மலிவான விலை திட்டத்தை நீக்கம் செய்துள்ளது. சரியாகச் சொல்லப் போனால், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதன் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதற்குப் பதிலாக புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

VI நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்
தெரியாதவர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் கூட சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் இருந்து தனது மலிவு திட்டத்தை நீக்கம் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது VI நிறுவனமும் அதே சுவடுகளைப் பின்பற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிறுவனம் தனது முந்தைய மலிவு விலை திட்டத்தை நீக்கம் செய்துவிட்டு, புதிதாக வேறு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம் ரூ.79 விலையில் வருகிறது.

ரூ.49 மற்றும் ரூ .79 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.49 மற்றும் ரூ .79 ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கையில், நிறுவனத்தின் ரூ.49 திட்டம் வெறும் 100 எம்பி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் ரூ. 38 டால்க் டைம் நன்மையை மொத்தமாக 14 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இதில் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலாக தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் என்ன நன்மைகள் உள்ளது என்று பார்க்கலாம்.

புதிய ரூ.79 ப்ரீபெய்ட் திட்டம் பெஸ்டானா திட்டமா?
Vi நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.79 ப்ரீபெய்ட் திட்டம் தனது பயனர்களுக்கு 200 எம்பி டேட்டா நன்மை மற்றும் ரூ. 64 மதிப்புள்ள டாக் டைமை நன்மையை ஒட்டுமொத்தமாக 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால் மீண்டும், இதில் முன்னர் பார்த்த ரூ. 49 திட்டத்தைப் போல எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் கிடைக்காது. ரூ.49 திட்டத்துடன் ஒப்பிடும்போது பயனர்கள் ரூ.79 திட்டத்துடன் கிட்டத்தட்ட இரட்டிப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள்.

ஏர்டெல்லுக்கு போட்டியாக Vi அறிமுகம் செய்யும் திட்டங்கள்
மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா உட்படத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொலைத்தொடர்பு வட்டங்களில் இந்த திட்டம் இன்னமும் அணுக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் முன்பே தெரிவித்தது போல, ஏர்டெல் நிறுவனமும் இதே செயலை செய்தது. ஏர்டெல் நிறுவனம் ரூ.49 திட்டத்தை நீக்கம் செய்துவிட்டு ரூ. 79 திட்டத்தை அறிமுகம் செய்தது என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications