புத்தாண்டுக்கு அட்டகாசமான சலுகை அறித்த வோடாபோன் ஐடியா.!
புத்தாண்டுக்காக ஐடியா வோடபோன் நிறுவனம் சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.30 மதிப்புள்ள அமேசான் பேட வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
ஆங்கில புத்தாண்டு வருவதையொட்டி வோடாபோன் ஐடியா நிறுவனம் அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது.

மேலும், ரீசார்ஜ் செய்தாலே இதில், கொடுக்கப்படும் வவுச்சர்களை அமேசான், டிடிஹெச் உள்ளிட்ட வலைதளங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புத்தாண்டு:
புத்தாண்டுக்காக ஐடியா வோடபோன் நிறுவனம் சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.30 மதிப்புள்ள அமேசான் பேட வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
இந்த வவுச்சர்கள் பயன்படுத்தி மொபைல் பில், டிடிஹெச், ரீசார்ஜ், அமேசான் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.95க்கு ரீசார்ஜ்:
புத்தாண்டு சலுகை கீழ் வோடபோன் ஐடியா ரூ.95 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 அமேசான் பே வவுச்சர்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியா, வோடாபோன் வாடிக்கையாளர்கள்:
வோடபோன் மற்றும் ஐடியா பிரீபெயிட் சேவை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் .
ரூ.95 விலை சலுகையில் தேர்வு செய்து அதற்கான பலன்களை பெற்றுக் கொள்ளலாம். சலுகை ஜனவரி 10ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் வரும்:
வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் புதிய புத்தாண்டு சலுகை பற்றி இதுவரை எந்த வித தகவலும் இல்லை. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

50 சதவீதம் தள்ளுபடி:
முன்னதாக வோடபோன் மற்றும் அமேசான் இணைந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சேவைக்கான சந்தாவில் 50 சதவீதம் தள்ளுபடியை வழங்கின.
தற்சமயம் வோடபோன் ரெட் போஸ்ட் பெயிட் சலுகைகைள் பயன்படுத்துவோருக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications