Home
News

அம்பானி பொழப்புல மண்ணு.. அடிச்சான் பாரு Vodafone.. டெய்லி டேட்டாவோட சேர்த்து எக்ஸ்ட்ரா 5GB.. எந்த ரீசார்ஜ்?

விஐ (VI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா நிறுவனமானது அதன் மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Prepaid Recharge) ஒன்றின் மீது அட்டகாசமான கூடுதல் நன்மையொன்றை அறிவித்துள்ளது. அதென்ன திட்டம்? அதில் கிடைக்கும் கூடுதல் நன்மை என்ன? இதோ விவரங்கள்:

நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும் பயனர்களின் எண்ணிக்கையை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பல வகையாக கூடுதல் பலன்கள் மற்றும் நன்மைகளை (Extra Benefits) வழங்கி வருகிறது.

அம்பானி பொழப்புல மண்ணு.. அடிச்சான் பாரு Vodafone!

இதனொரு பகுதியாக வோடபோன் ஐடியாவானது அதன் மலிவு விலை திட்டங்களில் ஒன்றான ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதல் டேட்டா (Additional Data) நன்மையை சேர்த்துள்ளது. அதாவது ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் வழக்கமாக கிடைக்கும் டெய்லி டேட்டாவுடன் சேர்த்து கூடுதல் டேட்டா நன்மையும் கிடைக்கும்

முன்னதாக ரூ.299 திட்டமானது தினமும் 1.5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கியது, தற்போது இதன் நன்மைகளில் 5ஜிபி கூடுதல் டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. அதவாது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் இது வழங்கும் மொத்த டேட்டாவான 42ஜிபி டேட்டாவுடன் சேர்த்து கூடுதலாக 5ஜிபி கிடைக்கும். ஆக இனிமேல் இந்த திட்டம் மொத்தம் 47ஜிபி டேட்டாவை வழங்கும்.

இந்த திட்டத்தில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், இது விஐ ஹீரோ அன்லிமிடெட் (Vi Hero Unlimited) நன்மைகளுக்கான நுழைவு நிலை ரீசார்ஜ் (Entry Level Recharge) திட்டமாகும். அறியதோர்க்ளுக்கு விஐ ஹீரோ அன்லிமிடெட் நன்மையின் கீழ் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் (Weekend Data Rollover), பிங்கே ஆல் நைட் (Binge All Night) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதுமட்டுமல்ல இந்த திட்டத்தின் கீழ் விஐ மூவீஸ் மற்றும் டிவி கிளாஸ்க்கின் (Vi Movies & TV Classic) ஓடிடி நன்மையும் அணுக கிடைக்கிறது. இதன்கீழ் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) பயனர்கள் ஆகிய இருவருமே விஐ ஆப் (Vi App) மூலம் ஓடிடி கன்டென்ட்டை பார்த்து மகிழலாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. இந்த "எக்ஸ்ட்ரா டேட்டா' சலுகையில் ஒரு சின்ன குறையும் உள்ளது. அது என்னவென்றால், கூடுதலாக கிடைக்கும் 5ஜிபி டேட்டாவை ரீசார்ஜ் செய்த முதல் 3 நாட்களிலேயே நீங்கள் காலி செய்து விட வேண்டும். இதன்பொருள், ரீசார்ஜ் செய்த நான்காவது நாளில் எக்ஸ்ட்ராவாக கிடைத்த 5ஜிபி காணாமல் போய்விடும்.

ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் மற்ற பொதுவான நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் (100 Free SMS) வழங்குகிறது. மிகவும் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு திட்டத்தில் 5ஜிபி எஸ்ஸ்ட்ரா டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது என்பது, உண்மையிலேயே வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ஒரு நல்ல நடவடிக்கை ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களிடம் இருப்பது போல, வோடபோன் ஐடியாவிடம் 5ஜி நெட்வொர்க் இல்லை என்கிற காரணத்தினாலாலும், விலைக்கு ஏற்ற சரியான நன்மைகள் கிடைப்பதில்லை என்கிற காரணத்தினாலும் பல கஸ்டமர்கள் வோடபோன் சேவையை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், வோடபோன் ஐடியா அறிவித்துள்ள இந்த எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையானது, விஐ சேவையை விட்டு வெளியேற நினைக்கும் சிலரையாவது தக்கவைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ்களுக்கு வோடாபோனின் ரூ.299 திட்டமானது கடும் போட்டியாக அமையும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Gives 5GB Bonus Data in Its Most Affordable Vi Hero Unlimited Recharge Rs 299 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X