Home
News

5G ஆட்டம் ஆரம்பம்.. மும்பை அடுத்து 2 நகரங்களில் சேவை.. குஷியில் வோடபோன் ஐடியா யூசர்கள்.. எந்தெந்த நகரங்கள்?

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் குஷியாகும்படி அந்த நிறுவனத்தின் அன்லிமிடெட் 5ஜி சேவைகள் மேலும் 2 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது, மகாராஷ்டிராவின் மும்பை சர்க்கிளில் மட்டுமல்லாமல், இந்தியாவின் முக்கியமான 2 நகரங்களையும் கவர் செய்துள்ளது. அவை எந்தெந்த நகரங்கள்? அங்கு 5ஜி திட்டங்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகியவை அவற்றின் 5ஜி சேவைகளை 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இப்போது, கிட்டத்தட்ட 95 சதவீதத்துக்கும் அதிகமான சர்க்கிள்களிலும் அவற்றின் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. ஆனால், வோடபோன் ஐடியா அப்படியில்லை.

5G ஆட்டம் ஆரம்பம்.. மும்பை அடுத்து 2 நகரங்களில்.. குஷியில் வோடபோன்!

மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக 5ஜி சேவையை தொடங்குவதில் காலம் தாழ்த்தியது. ஆனால், 2025ஆம் ஆண்டில் முழு வீச்சர்கள் 5ஜி சேவைகளை தொடங்க இருப்பதாக தெரிவித்தது. அதோடு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே எந்தெந்த நகங்களில் முதலில் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்பதையும் பட்டியலிட்டது.

அந்த பட்டியலின் அடிப்படையில் முதலில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்க்கிளில் முதலில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டன. ப்ரீபெய்ட் (Prepaid) மட்டுமல்லாமல் போஸ்ட்பெஸ்ட் திட்டங்களிலும் (Postpaid Plan) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சேவை கொடுக்கப்பட்டது. இப்போது, மேலும் 2 மாநிலங்களில் இருக்கும் முக்கிய சர்க்கிள்களில் தொடங்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் இருக்கும் பாட்னா நகரத்திலும், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் சண்டிகர் நகரிலும் இப்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாத இறுதிக்குள் பெங்களூரு, சண்டிகர், டெல்லி மற்றும் பாட்னா ஆகியவை நகரங்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி 2 நகங்களில் தொடங்கிவிட்டது.

ஆகவே, பெங்களூரூ மற்றும் டெல்லியில் அடுத்த ஓரிரு வாரங்களின் 5ஜி சேவைகள் தொடங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுபோன்ற சர்க்கிள்களை தவிர குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் கிடைக்கிறது. அதாவது, ஐபிஎல் 2025ஆம் ஆண்டு போட்டிகளை முன்னிட்டு 11 நகரங்களில் இருக்கும் ஸ்டேடியங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூரூவில் இருக்கும் சின்னசாமி ஸ்டேடியம், விசாகப்பட்டினத்தில் இருக்கும் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியம், மும்பையில் இருக்கும் வான்கடே மைதானம், டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி ஸ்டேடியம் மற்றும் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம் அடங்கும்.

மேலும், அகமதாபாத்தில் இருக்கும் நமோ ஸ்டேடியம், ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் ஸ்டேடியம், லக்னோவில் இருக்கும் ஏகானா ஸ்டேடியம், சண்டிகரில் இருக்கும் மகாராஜா யாதவிந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியம், ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி ஸ்டேடியம் ஆகியவற்றிலும் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. அடுத்து எந்தெந்த சிட்டிகளில் கிடைக்கும்?

மும்பை, பாட்னா, சண்டிகர் ஆகிய சிட்டிகளை தொடர்ந்து பெங்களூரூ, டெல்லி, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில், பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் பகுதிகளில் முதலில் கிடைக்க இருக்கிறது. இதேபோல அந்தந்த சிட்டிகளில் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்க உள்ளது.

வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட நகரங்களில் முதன்முதலில் மும்பையில் கிடைத்த விலையிலேயே 5ஜி திட்டங்கள் இருக்கின்றன. ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் முதல் அன்லிமிடெட் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. ஆகவே, அனைத்து சர்க்கிள்களிலும் ஒரே மாதிரியான விலையிலேயே திட்டங்கள் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Expanded 5G Services To New Cities Following in Mumbai Check Which Cities
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X