Home
News

Vodafone Idea: அடடா வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு சோதனையா? இரட்டை தரவு சலுகை நிறுத்தம்?

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை வழங்கி வந்தது, இந்நிலையில் வோடபோனகடந்த மாதம் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் இரட்டை தரவு சலுகையை (double data offer) அறிமுகப்படுத்தியது, ஆனால் இப்போது அது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இந்த திட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது.

 22வட்டங்களுக்கு பதிலாக

வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், வோடபோன் இப்போது 22வட்டங்களுக்கு பதிலாக 14வட்டங்களில் மட்டுமே இரட்டைதரவு நன்மைகள்(double data offer)திட்டத்தை வழங்கி வருகிறது. இதன்பொருள் என்னவென்றால் வோடபோன் 8வட்டங்களில் இந்த திட்டத்தை
நிறுத்தியுள்ளது..

வோடபோனின் புதிய திட்டம்

அதன்படி வோடபோனின் புதிய திட்டம் மபல்வேறு மக்களுக்குபயனளித்தது,காரணம் இந்த திட்டங்களில் இணைய நுகர்வு பல மடங்காக அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த திட்டங்கள் பின்வாங்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்சியான செய்தியாய் அமைந்துள்ளது.

சுருக்கமாக கூற வேண்டும்

குறிப்பாக வோடபோன் நிறுவனத்தின் இரட்டை தரவு பயன் சலுகை ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்களில்வழங்கப்படுகிறது. அதாவது தொலைத் தொடர்பு நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த திட்டங்களின் கீழ் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரு நாளைக்கு கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்குகின்றன. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

சலுகை முன்பு 22 நகரங்களில்  கிடைத்தது

ஆனாலும் இந்த சலுகை சலுகை ஆந்திரா, பீகார், குஜராத்,கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, பஞ்சாப் மற்றும் வடகிழக்கு உ.பி. பகுதிகளில் கிடைக்காது தற்போது கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முன்பு 22 நகரங்களில்கிடைத்தது.

செல்லுபடியாகும் காலம்

இந்த புதிய திட்டம் கூடுதல் செலவில்லாமல் நன்மைகளை இரட்டிப்பாக்கியதால்இ ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவுத் திட்டங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல ஒப்பந்தமாக பார்க்கப்பட்டது. எடுத்துக்காட்டாக ரூ.249 திட்டம் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது மற்றும் 28நாட்கள் செல்லுபடியாகும் காலத்தையும் அளிக்கிறது, இத்துடன் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100SMS அளிக்கிறது. ரூ.399 திட்டத்திலும் அதே நன்மைகள் கிடைக்கிறது. ஆனால்56 நாட்கள் செல்லுபடியாகும் காலம் வழங்குகிறது. மற்றும் ரூ.599 திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தை அளிக்கிறது.

3ஜிபி டேட்டா(தரவு)

இந்த மூன்று திட்டங்களும் வோடபோனின் இரட்டை தரவு நன்மை திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு மொத்தமாக 3ஜிபி டேட்டா(தரவு) நன்மையை வழங்கின. மாற்றங்கள் மாற்றங்கள் வோடபோன் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணப்பட்டன. ஆனால் தற்போது8 வட்டங்களுக்கு இந்த திட்டம் மறுக்கப்பட்டுள்ளது.

மே 3 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது

ஆனால் மற்றொரு குறிப்பில் வோடபோன் மற்றும் பாரதி போன்ற பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் றைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் மொபைல் கணக்குகளின் செல்லுபடியை மே 3 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவும் இதேபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Discontinues Double Data Offer and Extends Prepaid Validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X