Home
News

17 ரூபாயில் விடியவிடிய இலவச டேட்டா.. ஜியோவையே ஓடவிட்ட பெஸ்ட் டேட்டா திட்டம்..

இதுவரை எந்த டெலிகாம் நிறுவனமும் செய்யாத ஒரு வேலையை இந்தியாவின் மூன்றாவது தலைசிறந்த டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodafone-Idea) செய்துள்ளது. இந்தியாவின் முதன்மை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கூட இப்படி ஒரு திட்டத்தை வழங்கவில்லை என்பதே உண்மை.

ஆம், மலிவு விலையில் டேட்டா வழங்கும் ஜியோ நிறுவனம் கூட செய்யாத ஒரு வேலையை வோடபோன் ஐடியா அசால்ட்டாக செய்துள்ளது. வோடபோன் ஐடியா அல்லது விஐ (Vi) என்று அழைக்கப்படும் நிறுவனமானது மலிவு விலையில் டேட்டா நன்மையை சாதாரணமாக வழங்குவதை தாண்டி, விடிய-விடிய இலவச டேட்டாவை அன்லிமிடெட்டாக வழங்குகிறது.

17 ரூபாயில் விடியவிடிய இலவச டேட்டா.. ஜியோவையே ஓடவிட்ட பெஸ்ட் திட்டம்..

வோடபோன் ஐடியா நிறுவனம் இப்போது ரூ.50 விலைக்குள் அட்டகாசமான டேட்டா நன்மைகளை வழங்க கூடிய டேட்டா வவுச்சர் திட்டங்களை (Vodafone Idea Prepaid Data Vouchers Under Rs 50) வழங்குகிறது. வோடபோன் ஐடியா வழங்கும் டேட்டா வவுச்சர்களின் நன்மைகளை பற்றி பார்க்கலாம். Vodafone Idea (Vi) பல ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்களை ரூ. 50 விலைக்கு கீழ் வழங்குகிறது. இந்த பட்டியலில் உள்ள முதல் திட்டமானது ரூ. 17 விலையில் வருகிறது.

ரூ. 17 விலையில் கிடைக்கும் டேட்டா வவுச்சர் தான் இருப்பதிலேயே மிகவும் மலிவு விலை திட்டமாகும். வோடபோன் ஐடியாவின் ரூ.17 டேட்டா வவுச்சர் இலவச இரவு டேட்டாவுடன் வருகிறது. இது 1 நாள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் 12 AM முதல் 6 AM வரை வரம்பற்ற டேட்டாவை இலவசமாக பெறுகிறார்கள்.

அதாவது நள்ளிரவு முதல் விடியும் வரை விடியவிடிய டேட்டாவை அளவின்றி அன்லிமிடெட்டாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல், விஐ நிறுவனம் ரூ. 19 விலையில் மற்றொரு திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 24 மணிநேரத்திற்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 24 மணி நேரம் என்பது இதன் செல்லுபடியாகும் காலமாகும்.

இதற்குப் பிறகு, உங்களுக்கு ரூ. 24 விலையில் வோடபோன் ஐடியா மற்றொரு டேட்டா வவுச்சர் திட்டத்தை வழங்குகிறது. இது ஒரு மணிநேர வேலிடிட்டியுடன் வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில், பயனர்கள் உண்மையிலேயே வரம்பற்ற டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த ஒரு மணிநேரத்தில் நீங்கள் எவ்வளவு அதிவேக டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு வரம்பு என்று எதுவுமே கிடையாது. 1 மணி நேரத்திற்குள் 100ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடிந்தால் கூட, நீங்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். அது உங்கள் சாமர்த்தியம் என்கிறது நிறுவனம். நீங்கள் விளம்பரமில்லா இசையை கேட்க விரும்பினால், ரூ. 25 டேட்டா வவுச்சரைப் பெறலாம். இந்த திட்டத்தில், பயனர்கள் 1 நாளுக்கு 1.1 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.

இருப்பினும், Vi ஆப்ஸில் ஹங்காமா மியூசிக் மூலம் 7 ​​நாட்களுக்கு விளம்பரமில்லா இசையின் கூடுதல் பலன் உடன் டேட்டா நன்மையை நீங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு, நீங்கள் ரூ.29 திட்டத்திற்கு செல்லலாம். இந்த திட்டம் 2 நாட்களுக்கு 2ஜிபி டேட்டாவுடன் வரும் சாதாரண டேட்டா வவுச்சராகும்.

உங்களுக்கு அதிக டேட்டா தேவை என்றால், ரூ.39 திட்டத்தில் 3ஜிபி டேட்டா மற்றும் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் வரலாம். பட்டியலில் கடைசியாக ரூ 49 திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில், பயனர்கள் 6 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் 24 மணிநேரம் அல்லது 1 நாள் மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Data Voucher Prepaid Plan Under Rs 50
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X