Home
News

அட்ரா சக்கை.. Vodafone Idea-வின் அன்லிமிடெட் பிளான்.. இவ்ளோ கம்மி விலைக்கு 300GB டேட்டா, வாய்ஸ், SMS-ஆ!

200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, எந்த போட்டியாளர்களும் (ஜியோ, ஏர்டெல்) வழங்காத ஒரு திட்டத்தை அதன் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது.

அது ஒரு விஐ அன்லிமிடெட் 4ஜி டேட்டா பிளான் ஆகும். வழக்கமாக டேட்டா பிளான் என்றால், அதன்கீழ் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும்; வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்காது அல்லவா? ஆனால் இந்த திட்டம் ஒரு அன்லிமிடெட் டேட்டா பிளான் ஆகும்.

அட்ரா சக்கை.. Vodafone Idea-வின் அன்லிமிடெட் பிளான்!

இதன் கீழ் அன்லிமிடெட் 4ஜி டேட்டா கிடைக்கும் என்று வோடாபோன் ஐடியா நிறுவனம் கூறினாலும் கூட, உண்மையில் இந்த திட்டம் அது வழங்கும் அதிவேக டேட்டா நுகர்வுக்கு ஒரு வரம்பை கொண்டுள்ளது. அந்த வரம்பு 300ஜிபி ஆகும். பலருக்கும் 300ஜிபி என்பதே பெரிய நன்மையாகும்.

நாம் இங்கே பேசுவது வோடபோன் ஐடியாவின் ரூ.365 அன்லிமிடெட் 4ஜி டேட்டா பிளானை பற்றித்தான். இவ்வளவு பெரிய டேட்டா நன்மையை வழங்கும் விஐ நிறுவனத்தின் மலிவான ரீசார்ஜ் திட்டமான இது - உண்மையிலேயே மதிப்புள்ளதா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள திட்டத்தின் நன்மைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.365 திட்டம் ஆனது வரம்பற்ற வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற 4ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி இதன்கீழ் கிடைக்கும் வரம்பற்ற டேட்டா 300ஜிபி என்கிற வரம்பை கொண்டுள்ளது

இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஒரு நான்-ஸ்டாப் ஹீரோ வகை திட்டம் ஆகும். பெரும்பாலான வட்டங்களில் உள்ள வோடாபோன் ஐடியா பயனர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். விஐ-யின் ரூ.365 திட்டம் ஆனது, பயனர்களை அதன் சேவைகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக வழங்கும் ஒரு மலிவு விலை திட்டமாகும். இது நிறுவனத்தின் ஏஆர்பியு-வை (ARPU), அதாவது ஒரு பயனருக்கு சராசரி வருவாய் அதிகரிக்க உதவுகிறது.

சமீபத்தில் தான் இந்நிறுவனம் புதிய பேமிலி ரீசார்ஜ் பிளான் (New Family Recharge Plan) ஒன்றை அறிமுகம் செய்து இருந்தது. அது ரூ.1,601 மதிப்புள்ள ரெட்எக்ஸ் பேமிலி பிளான் ஆகும். விஐ நிறுவனத்தின் கூற்றுப்படி - இது வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, சர்வதேச ரோமிங் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏராளமான எண்டர்டெயின்மெண்ட் (பொழுதுபோக்கு), டிராவல் (பயணம்) மற்றும் லைஃப்ஸ்டைல் (வாழ்க்கை முறை) சலுகைகளை வழங்கும்.

என்னென்ன நன்மைகள்? 2 மெம்பர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,601 என்கிற விலையில் வழங்கப்படும் இந்த திட்டம், ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதத்திற்கு வரம்பற்ற டேட்டா (4ஜி / 5ஜி), வாய்ஸ் கால்கள் மற்றும் 3000 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பயனருக்கும் ஒரே மாதிரியான முக்கிய நன்மைகளை வழங்கும் இந்த திட்டத்தில் தலா ரூ.299 க்கு கூடுதல் உறுப்பினர்களையும் சேர்க்கலாம்.

என்டர்டெயிமென்ட் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1601 மதிப்புள்ள ரெட்எக்ஸ் பேமிலி திட்டத்தில் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் ப்ரைம் (Amazon Prime),ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனி லைவ் (SonyLIV) போன்ற ஓடிடி (OTT) தளங்களுக்கான அணுகல்களும் கிடைக்கும். அதாவது இந்த திட்டம் வழக்கமான நண்மைகளுடன் ஒரு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

டிராவல் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1601 ரெட்எக்ஸ் பேமிலி திட்டத்தின் பயனர்கள் வருடத்திற்கு நான்கு இலவச விமான நிலைய லவுஞ்ச் வருகைகள், ஆண்டுக்கு ரூ.2,999 மதிப்புள்ள 7 நாள் சர்வதேச ரோமிங் பேக் மற்றும் இரண்டாவது ரோமிங் பேக்கில் 25 சதவீத தள்ளுபடி (ரூ.750 வரை) ஆகிய நன்மைகளை பெறுவார்கள், இதை குடும்பத்தின் எந்த உறுப்பினரும் பயன்படுத்தலாம்.

லைஃப்ஸ்டைல் நன்மைகளை பொறுத்தவரை, 6 மாத ஸ்விக்கிஒன் (Swiggy One) சந்தா மற்றும் ஒரு வருட நார்டன் (Norton) டிவைஸ் ப்ரொடெக்ஷன் ஆகிய நன்மைகள் கிடைக்கும். மேலும் விஐ ப்ரையாரிட்டி (Vi Priority) சேவையின் கீழ் ரெட்எக்ஸ் வாடிக்கையாளர்கள் 24/7 அர்ப்பணிப்புள்ள கஸ்டமர் கேர், ஸ்டோர்களில் முன்னுரிமை மற்றும் மூத்த குடிமக்களுக்கான வீட்டு வாசலில் சிம் டெலிவரி உள்ளிட்ட பிரத்யேக சலுகைகளை அனுபவிக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Cheapest Unlimited 4G Data Plan Rs 365 Benefits Validity Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X