2025 வந்ததும் வேலையை பார்த்த Vodafone.. 1GB ரீசார்ஜ் மீது மீண்டும் விலை உயர்வு.. எந்த திட்டம்?
வோடாபோன் ஐடியா (Vodafone Idea), கடந்த 2024 ஆம் ஆண்டில் மொபைல் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அறிவித்த கடைசி நிறுவனமாக இருந்தது. பார்தி ஏர்டெல் நிறுவனம் தான் முதலில் விலை உயர்வை அறிவித்தது, அதன் பின்னர் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது. கடைசியாகவே விஐ தனது ரீசார்ஜ் திட்டங்களின் மீதான விலை உயர்வை அறிவித்தது.
ஆனால் இம்முறை 2025 ஆம் ஆண்டு தொடங்கிய வேகத்தில் விஐ நிறுவனமானது (தானாகவே) தனது மலிவு விலை ரீசார்ஜ் ஒன்றின் மீது விலை உயர்வை அறிவித்துள்ளது. விலை உயர்த்தப்பட்ட வோடாபோன் ஐடியா திட்டமானது 1ஜிபி டேட்டாவை வழங்கும் டேட்டா வவுச்சர் ஆகும். முன்னதாக இது ரூ.19 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. இடையில் இந்த திட்டத்தின் விலை ரூ.22 ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது இந்த திட்டத்தின் விலை மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.22 இல் இருந்து ரூ.23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் புதிய விலை நிர்ணயம் இப்போது விஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதிபலிக்கிறது. இந்த விலை உயர்வு இந்தியா முழுவதும் உள்ள வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலோட்டமாக பார்த்தால் ரூ.1 என்பது பெரிய அளவிலான விலை உயர்வு இல்லை தான். ஆனால் ரூ.23-ன் கீழ் 1ஜிபி அளவிலான டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதுடன் ஒப்பிட்டு பார்த்தால் 1ஜிபி அளவிலான டேட்டா மதிப்பு ரூ.23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்ள முடியும்.
ரூ.23 திட்டமானது ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதும், ஆக்டிவ் ஆக உள்ள பேஸிக் ப்ரீபெய்ட் திட்டத்தின் மேல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, இந்த திட்டம் செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வை, ரூ.26 பேக்கை ரீசார்ஜ் செய்ய பயனர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
ரூ.26 திட்டமும் கூட ஒரு டேட்டா வவுச்சராகும். ரூ.23 க்கும் இதற்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் வெறும் ரூ.3 தான். ரூ.26 வவுச்சரை ரீசார்ஜ் செய்யும் விஐ ப்ரீபெய்டு பயனர்களுக்கு 1 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 1.5ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது ரூ.3 வித்தியாசத்தில் 50% அதிக டேட்டா நன்மை கிடைக்கும்
இதனால், திடீர் டேட்டா தேவையை எதிர்கொள்ளும் விஐ பயனர்கள் ரூ.23 திட்டத்திற்கு பதிலாக ரூ.26 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாய்ப்புள் அதிகமாக இருக்கும். ரூ.22-ஐ தவிர்த்து வோடாபோன் ஐடியா நிறுவனம் வேறு எந்த ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரின் விலையையும் மாற்றவில்லை. வரும் நாட்களில் விலை உயர்வும் அறிவிப்பதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை என்பதால், விஐ கஸ்டமர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.
விஐ தொடர்பான சமீபத்திய செய்தியை பொறுத்தவரை, வோடபோன் ஐடியா நிறுவனமானது அதன் விஐ மூவீஸ் மற்றும் டிவி (Vi Movies and TV) சேவையில், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) ஓடிடி தளத்தை இணைத்துள்ளது. இந்த தளத்தின்கீழ் பல பிரபலமான திரைப்படங்கள், பிரீமியம் ஒரிஜினல் மற்றும் வெப் சீரீஸ்களை பார்க்க முடியும். கடந்த அக்டோபர் 2024இல் சன் நெக்ஸ்ட் (SunNXT) உடன் கூட்டு சேர்ந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை வருகிறது.
லயன்ஸ்கேட் பிளே ஓடிடி-ஐ தனது சேவையின் கீழ் இணைத்ததன் மூலம், தற்போது விஐ மூவீஸ் மற்றும் டிவி சேவையின் கீழ் 16 ஓடிடி இயங்குதளங்களான இலவச அணுகல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியும். 4 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் 2 போஸ்ட்பெயிட் திட்டங்கள் என விஐ மூவீஸ் மற்றும் டிவி சேவையானது மொத்தம் 6 திட்டங்களின் கீழ் அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அவைகள்:
01. விஐ ரூ.154 டேட்டா பேக் (விஐ மூவீஸ் அன்ட் டிவி லைட் பிளான்
02. விஐ ரூ.175 டேட்டா பேக் (விஐ மூவீஸ் அன்ட் டிவி சூப்பர் பிளான்)
03. விஐ ரூ.202 டேட்டா பேக் (விஐ மூவீஸ் அன்ட் டிவி ப்ரோ பிளான்)
04. விஐ ரூ.248 டேட்டா பேக் (விஐ மூவீஸ் அன்ட் டிவி பிளஸ் பிளான்)
05. விஐ ரூ.199 ப்ரோ பேக் (போஸ்ட்பெயிட்)
06. விஐ ரூ.248 பிளஸ் பேக் (போஸ்ட்பெயிட்)


Click it and Unblock the Notifications








