வோடபோன் ஐடியா பயனர்கள் கவனத்திற்கு: 2 திட்டங்களின் பலன்கள் மாற்றப்பட்டுள்ளது: இதோ முழு விவரம்.!
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை விட அதிக வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். சமீபத்தில் கூட வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.181 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. அதாவது தற்போது வோடபோன் நிறுவனத்தின் ரூ.129 மற்றும் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டங்களின் பலன்கள் மாற்றப்பட்டுள்ளது. இப்போது இந்த இரண்டு திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தற்போது அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகின்றன. இப்போது இந்த திட்டத்தில் மாற்றப்பட்ட பலன்களைப் பார்ப்போம். அதாவது நீங்கள் இப்போது வோடபோன் ஐடியா ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் காலிங், 200 எம்பி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
வோடபோன் ஐடியா ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகின்றன. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி, பிரீமியம் திரைப்படங்கள், ஒரிஜினல்ஸ், செய்திகள் மற்றும் நேரலை டிவி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வோடபோன் ஐடியா அறிமுகம் செய்த ரூ.181 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம். அதாவது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 181 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக இது பூஸ்டர் பேக் ஆகும். மேலும் இந்நிறுவனம் வைத்துள்ள சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற சில நன்மைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications