Home
News

ஒரே ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. வாய்ஸ் கால்கள்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அசத்தும் VI..

ஏர்டெல், ஜயோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் 1 வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரே ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. அசத்தும் VI..

வோடபோன் ஐடியா ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

அதேபோல் வோடபோன் ஐடியா ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா கிடைக்கும். இதுதவிர பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர்(Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV), 16ஜிபி போனஸ் டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதேபோல் 48ஜிபி போனஸ் டேட்டா வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா சந்தா வழங்கப்படுகிறது. மேலும் பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV), உள்ளிட்ட நன்மைகளும் இதில் உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தில் போனஸ் டேட்டா கிடைக்காது. அதேசமயம் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா, பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர்(Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV),உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஒரே ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. அசத்தும் VI..

வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே வோடபோன் ஐடியா ரூ. 3099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வோடபோன் ஐடியா ரூ. 3099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா சந்தா வழங்கப்படுகிறது. மேலும் பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV), உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea budget-friendly prepaid plans offer disney plus hotstar for one year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X