திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மிகவும் மலிவான விலைக்கு 180 நாட்களுக்கு சிம் ஆக்டிவ்.. Vodafone புதிய திட்டம்!
வோடபோன் ஐடியா (VI) நிறுவனமானது, அதன் வாடிக்கையாளர்களுக்காக 180 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி கொண்ட ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு வேல்யூ திட்டமாக (Value Plan) வந்துள்ளது. அதாவது மலிவான விலைக்கு நீண்ட நாட்களுக்கு தங்கள் சிம் கார்டுகளை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் தெளிவான சொல்ல வேண்டுமென்றால் - இது முதன்மையாக வாய்ஸ் கால் நன்மைகள் மற்றும் சர்வீஸ் வேலிடிட்டியை விரும்பும் நுகர்வோரை இலக்காக கொண்டது. ஆக இந்த திட்டத்துடன் குறைவான டேட்டா நன்மையே கிடைக்கும். ஆனாலும் செல்லுபடியாகும் 180 நாட்களில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும், தேவைக்கு ஏற்ப டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்யலாம்.

நாம் இங்கே பேசும் - 180 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் வோடபோன் ஐடியாவின் புதிய திட்டத்தின் விலை ரூ.1149 ஆகும். நன்மைகளை பொறுத்தவரை வோடபோன் ஐடியா ரூ.1149 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மொத்தம் 1800 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மொத்தம் 20 ஜிபி டேட்டாவை வழங்கும்
டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு டேட்டா கட்டணம் ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். எஸ்எம்எஸ் ஒதுக்கீட்டிற்கு பிறகு, உள்ளூர் எஸ்டிடி/எஸ்எம்எஸ்-க்கு ரூ.1/1.5 கட்டணம் பொருந்தும். இந்த திட்டத்தை 180 நாட்களுக்கு பயன்படுத்துவதற்கான தினசரி செலவு வெறும் ரூ.6.38 மட்டுமே ஆகுன்.
உண்மையிலேயே தங்கள் சிம் கார்டுகளை மிகவும் மலிவான விலைக்கு ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்புவோர்களுக்கு இதுவொரு சரியாக தேர்வாக இருக்கும். டெலிகாம்டால்க்கின் (TelecomTalk) அறிக்கையின்படி வோடபோன் ஐடியாவின் ரூ.1149 திட்டமானது அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
புதிய ரூ.1149 திட்டம் ஆனது ரூ.2249 திட்டத்தின் "தம்பியை" போல தெரிகிறது. ரூ.2249 திட்டமானது 40 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதாவது ரூ.2249 ஆனது ரூ.1149 திட்டத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலை அதிகம், மேலும் இது சரியாக இரண்டு மடங்கு நன்மைகளையும் வழங்குகிறது.
வோடபோன் ஐடியா சைலன்ட் ஆக அறிமுகம் செய்துள்ளது ரூ.2249 ப்ரீபெய்ட் திட்டத்தை தான். வோடபோன் ஐடியாவின் ரூ.2249 திட்டம் பெரும்பாலான வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் காலிங், மொத்தம் 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இமாச்சல பிரதேசத்தில் மட்டும் இதே திட்டம் சற்று மாறுபட்ட நன்மைகளை கொண்டுள்ளது. அங்குள்ள பயனர்கள் மற்ற வட்டங்களில் வழங்கப்படும் 30 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 40 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். மற்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் கூட பயனர்கள் 40 ஜிபி டேட்டாவை பெறலாம்.
ஆக ரீசார்ஜ் செய்வதற்கு முன்பாக, அதை சரிபார்க்கவும். வோடபோன் ஐடியா அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டத்தை வழங்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இது நியாயமான விலையில் நீண்ட கால செல்லுபடியை விரும்பும் மக்களுக்கான திட்டமாகும். அடிப்படை பயன்பாடு மட்டும் இருந்தால் 30ஜிபி என்பது போதுமான டேட்டாவாக இருக்கும்.
இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு ரூ.6.16 ஆகும். இது - டேட்டாவுடன் கூடிய வருடாந்திர திட்டங்களுக்கு பயனர்கள் செலுத்த வேண்டியதை விட மிகவும் மலிவாகும். இந்த திட்டத்திலும் டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு டேட்டா, இந்த திட்டத்தின் கீழ் 50 பைசா/எம்பி என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்எம்எஸ் லிமிட் தீர்ந்துவிட்டால் கூட உள்ளூர்/எஸ்டிடி எஸ்எம்எஸ்-க்கு ரூ.1/1.5 வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








