Vi அறிமுகம் செய்த 5 புதிய திட்டங்கள்.. ஆரம்பமே வெறும் ரூ.29 தான்.. நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவின் டெலிகாம் பயனர்களைப் பொறுத்தவரை, அவர்கள் குறைந்த விலையில் அதிக நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்களை தான் ரீசார்ஜ் செய்ய அதிகம் விரும்புகிறார்கள். உண்மையை சொல்ல போனால், எல்லோருக்குமே இது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு மலிவு விலையில் போதுமான நன்மைகள் கிடைக்கும் திட்டங்கள் கிடைத்தால், அவர்களின் பட்ஜெட்டிற்கு சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறார்கள். அவர்களுக்காகவே தற்போது Vi நிறுவனம் ஐந்து புதிய மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

Vi நிறுவனம் அறிமுகம் செய்த 5 புதிய திட்டங்கள்
இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா அல்லது Vi நிறுவனம், அதன் ரீசார்ஜ் திட்ட பட்டியலில் ஐந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைச் சேர்த்துள்ளது. இந்த திட்டங்கள் பயனர்களுக்கு மிகவும் மலிவு விருப்பங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. உண்மையில் இது இந்தியாவில் வரவேற்கப்படும் என்று நம்பப்படுகிறது. டெல்கோவின் சலுகைகளில் சேர்க்கப்பட்டுள்ள ஐந்து புதிய திட்டங்கள் ரூ.29, ரூ.39, ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 ஆகும்.

வெறும் ரூ. 29 விலையில் மலிவு விலை திட்டம்
இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் பயனர்களுக்கு என்ன நன்மைகளைத் தருகின்றன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். முதலில், வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் மிகவும் மலிவான விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம். இந்த திட்டம் உங்களுக்கு வெறும் ரூ. 29 விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ரூ.29 ப்ரீபெய்ட் திட்டமானது, அதன் விலையில் கிடைக்கக்கூடிய ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும். உங்கள் அடிப்படை திட்டத்தின் FUP (நியாயமான-பயன்பாடு-கொள்கை) தரவு தீர்ந்துவிட்டால் இந்த 4G டேட்டா வவுச்சரை நீங்கள் பயன்படுத்தலாம்.

Vodafone Idea ரூ.39 திட்டம்
இந்த ரூ.29 திட்டத்தில், பயனர்கள் 2ஜிபி FUP டேட்டாவை 2 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மட்டுமே பெறுவார்கள். இந்த திட்டத்தில் பயனர்கள் அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மை போன்ற மற்ற எந்த நன்மையையும் பெற மாட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அடுத்தபடியாக, வோடபோன் ஐடியா வழங்கும் ரூ. 39 ப்ரீபெய்ட் திட்டம் பற்றிப் பார்க்கலாம். இந்த Vodafone Idea ரூ.39 திட்டம் 4G டேட்டா வவுச்சராக வருகிரியாது. இந்தத் திட்டத்தில், பயனர்கள் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் 3ஜிபி FUP டேட்டாவைப் பெறுகிறார்கள். இத்திட்டம் வேறு எந்த பலன்களையும் வழங்குவதில்லை.

வோடபோன் ஐடியா ரூ 98 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ. 98 திட்டத்தின் விஷயங்கள் முந்தைய திட்டங்களை விட இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானவை. Vi இந்த திட்டத்தை இரண்டு வெவ்வேறு வட்டங்களில் வெவ்வேறு வழிகளில் வழங்குகிறது. நிறுவனத்தின் தகவல் படி குஜராத் மற்றும் மகாராஷ்டிரா & கோவா வட்டங்களில் வழங்கப்படுவதை ஒப்பிட்டுப் பார்த்த போது, குஜராத்தில், ரூ.98 என்பது 21 நாட்களுக்கு 9ஜிபி டேட்டாவை வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டமாகும். இது அங்கு ஒரு 4ஜி டேட்டா வவுச்சராக செயல்படுகிறது.

டேட்டா நன்மை உடன் அழைப்பு நன்மை கிடைக்கும் திட்டம்
ஆனால், இதே திட்டம் மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் டேட்டா வவுச்சராக இல்லாமல், வேறு விதமாகச் செயல்படுகிறது. இந்த Vi ரூ.98 திட்டம் உண்மையிலேயே வரம்பற்ற குரல் அழைப்பு, 200MB டேட்டா மற்றும் 15 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. நிறுவனம் வழங்கும் வெளிச்செல்லும் SMS எதுவும் இதில் இல்லை. FUP தரவு பயன்படுத்தப்பட்ட பிறகு Vi ஆனது 50p/MB டேட்டாவை வசூலிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.195 ப்ரீபெய்ட் திட்டம்
Vodafone Idea வழங்கும் ரூ. 195 திட்டம் என்பது நிறுவனம் சேர்த்த புதிய ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 2GB FUP டேட்டாவுடன் 300 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை 31 நாட்களுக்குப் பெறுவார்கள். Vi Movies & TV Basic இன் கூடுதல் நன்மையும் இதில் உள்ளது. அடுத்தபடியாக நிறுவனம் வழங்கக்கூடிய, வோடபோன் ஐடியா ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம் பற்றி பார்க்கலாம். Vodafone Idea அதன் ரூ.319 திட்டத்தை 31 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

Vi Hero அன்லிமிடெட் பலன்கள்
Vi டெல்கோ இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. Vi Hero அன்லிமிடெட் பலன்களும் உள்ளன, இவை Binge All Night, Data Rollover மற்றும் Data Delights சலுகைகளை அட்டவணைக்குக் கொண்டு வருகின்றன. இந்த பதிவில் பார்த்த இரண்டு டேட்டா வவுச்சர்களும் எல்லா வட்டங்களிலும் இன்னும் கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். வோடபோன் ஐடியா இணையதளத்திற்குச் சென்றவுடன், குஜராத் வட்டத்தில் இந்தத் திட்டங்களை நீங்கள் கவனிக்கலாம்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் மற்ற திட்டங்கள்
இந்த இரண்டு டேட்டா வவுச்சர்களும் (ரூ. 29 மற்றும் ரூ. 39) பல வட்டங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், எல்லாருக்கும் கண்டிப்பாகக் கிடைக்குமா என்பதை நிறுவனம் தெளிவாக அறிவிக்கவில்லை. இந்த திட்டங்கள் வரும் நாட்களில் அடுத்த வட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற திட்டங்களில் சில திட்டங்கள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. இதற்கு ஒத்த சில திட்டங்களை நிறுவனம் வேறு விலை வரம்பில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications