Just In
- 11 hrs ago
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- 12 hrs ago
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- 12 hrs ago
ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் அறிமுகமான Ptron ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!
- 13 hrs ago
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
Don't Miss
- News
"நீதிபதிகள் தேர்தலை சந்திப்பதில்லை எனவே..!" கொலீஜியம் பற்றி பாயிண்ட் பாயிண்டாக சொன்ன கிரண் ரிஜிஜூ
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Movies
பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
Vodafone Idea சொன்ன டாப் 3 பிளான்கள்: கம்மி விலையில் அன்லிமிடெட் டேட்டா, அதிக வேலிடிட்டி!
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. அதிக வாடிக்கையாளர்களுடன் நாட்டின் முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக Jioவும், இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக Airtel-ம் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் Vodafone Idea (VI) உள்ளது.
Vodafone Idea சமீப காலமாக தொடர்ச்சியாக பயனர்கள் இழப்பை சந்தித்து வருகிறது. Vodafone Idea பயனர்கள் இழப்பை சந்திக்க காரணம் என்ன?

வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், அதிகரிக்கவும் முயற்சி
அதிக வாடிக்கையாளர்களுடன் இருக்கும் ஜியோ, பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட கம்மி விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
ஜியோவுடன் ஈடுகட்டும் வகையில் ஏர்டெல்லும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி பயனர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பயனர்களை இழந்து வரும் வோடபோன் ஐடியாவும் தத்தித் தடுமாறி இந்த போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
இருப்பினும் அவ்வப்போது வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை விஐ மேற்கொண்டு வருகிறது.

பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள் இதுதான்
அதன்படி வோடபோன் ஐடியா தனது இணையதளத்தில் 3 ப்ரீபெய்ட் திட்டங்களை, சிறந்த விற்பனை ரீசார்ஜ் திட்டங்கள் என பட்டியலிட்டுள்ளது. இந்த 3 ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறித்து பார்க்கையில், அது ரூ.299, ரூ.479 மற்றும் ரூ.719 ஆகும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் Vi Hero அன்லிமிடெட் நன்மைகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரம்பற்ற வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் பிங்கே ஆல் நைட் நன்மைகளும் அடங்கும்.

பயனர்கள் விரும்பும் ரீசார்ஜ் திட்டங்கள்
வோடபோன் ஐடியா பயனர்கள், பெரும்பாலும் விரும்பும் ரீசார்ஜ் திட்டங்கள் இதுதான் என விஐ தெரிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்யும் நபர்களின் எண்ணிக்கையை நிறுவனம் குறிப்பிடவில்லை.
இந்த திட்டங்களில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேள்வி வரலாம், அதற்கான பதிலை விரிவாக பார்க்கலாம் வாங்க.

பல்வேறு நன்மைகளுடன் ரீசார்ஜ் திட்டங்கள்
வோடபோன் ஐடியா(விஐ) பெஸ்ட் விற்பனை ரீசார்ஜ் திட்டங்கள், விலை ரூ.299, ரூ.479 மற்றும் ரூ.719 ஆகும்.
பயனர்கள் இந்த 3 ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுக்க காரணம், இதில் வரம்பற்ற அத்தியாவசிய வசதிகளுடன், வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை வழங்கப்படுகிறது.
வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் என்பது திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தலாம்.

இலவச வரம்பற்ற டேட்டா
இதனுடன் Binge All Night சலுகையும் உள்ளது. இது 12 AM முதல் 6 AM வரை இலவச வரம்பற்ற டேட்டாவை பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கிறது. இந்த நேரத்தில் பயன்படுத்தும் டேட்டாக்கள் FUP டேட்டா வரம்பை பாதிக்காது. திட்டங்களின் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
Vodafone Idea (VI) ரூ.299 ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டையக் கொண்டிருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினசரி 1.5GB நன்மை வழங்கப்படுகிறது.
அதேபோல் தினசரி 100 SMS, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் கொண்டிருக்கிறது. Vi Movies & TV Classic பயன்பாட்டுக்கான இலவச அணுகலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஹீரோ அன்லிமிடெட் நன்மைகளையும் கொண்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.479 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.479 ரீசார்ஜ் திட்டமானது ரூ.299 ரீசார்ஜ் திட்டம் போன்றே நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரலழைப்பு மற்றும் Vi Movies & TV Classic நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
ரூ.479 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை பார்க்கையில், ரூ.479 ரீசார்ஜ் திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டமும் Vi Hero அன்லிமிடெட் நன்மையைக் கொண்டிருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.719 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.719 ரீசார்ஜ் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டையைக் கொண்டிருக்கிறது. அனைத்து திட்டங்களிலும் இருப்பது போல் வரம்பற்ற குரலழைப்பு, 100 SMS, தினசரி 1.5GB டேட்டா நன்மையைக் கொண்டிருக்கிறது. Vi Movies & TV Classic மற்றும் Hero அன்லிமிடெட் நன்மைகளை இந்த திட்டம் கொண்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470