2025 புத்தாண்டு.. ஒரே Vodafone Idea ரீசார்ஜ்.. ஆண்டு முழுவதும் கவலை இருக்காது.. அன்லிமிடெட் சலுகைகள்..
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம். அதேபோல் இந்நிறுவனத்தின் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் போன்ற சலுகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தான் வோடபோன் ஐடியா திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த 2025-ல் ஒருமுறை மட்டும் ரீசார்ஜ் செய்து, அண்டு முழுவதும் கவலையின்றி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் வோடபோன் ஐடியா பயனர்கள் ரூ.3599, ரூ.3699 மற்றும் ரூ.3799 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தவறவிடக்கூடாது. இப்போது இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ.3599 திட்டம் (Vodafone Idea Rs.3599 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை, டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் வோடபோன் ஐடியா ரூ.3599 திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர இந்த திட்டத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் கிடைத்த அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகையானது, இப்போது 6 மணி நேரம் கூடுதலாக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மதியம் 12 மணி வரையில் நீங்கள் ப்ரீ டேட்டாவை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா ரூ.3699 திட்டம் (Vodafone Idea Rs.3699 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்
ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தா வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.3699 திட்டம். பின்பு எப்போதும்போல இரவு நேர இலவச டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை, டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.3799 திட்டம் (Vodafone Idea Rs.3799 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்.

ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான வோடபோன் ஐடியா ரூ.3799 திட்டம். மேலும் எப்போதும்போல இரவு நேர இலவச டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை, டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் கிடைக்கிறது.
அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
photo credit: static.vecteezy


Click it and Unblock the Notifications








