Home
News

ஏர்டெல், ஜியோவை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் இலவச சலுகை அறிவிப்பு.!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு மக்களுக்கு உதவிடும் வகையில் வோடபோன் ஐடியா நிறுவனமும் இலசவச சலுகையை அறிவித்துள்ளது. அதாவது குறைந்த வருமானம் கொண்ட 60 மில்லியன் சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளதாக வோடபோன்
ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம்

வோடபோன் ஐடியா நிறுவனம்

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 பேக்கை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் வோடபோன் ஐடியாவின் ரூ.49 பேக் ஆனது 100எம்பி டேட்டா, ரூ.38 க்கான டாக் டைம் நன்மையைக் கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.79

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.79 காம்போ வவுச்சர் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.79-பேக்கில் 200எம்பி டேட்டா, ரூ.128 டாக் டைம் நன்மைகள் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதற்குமுன்பு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் அறிவித்த சலுகைகளைப் பார்ப்போம்.

ஜியோ நிறுவனத்தின் சலுகைகள்

ஜியோ நிறுவனத்தின் சலுகைகள்

ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள முதல் சலுகை என்னவென்றால், இந்த கொரோனா பெருந்தொற்று காலம் நீடிக்கும் வரை ஜியோபோன்
வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

 இரண்டாவது

ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இரண்டாவது சலுகை என்னவென்றால், ஜியோபோன் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினாலும், கூடுதலாக அதே மதிப்பிலான திட்டம் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது சலுகையைப்

ஜியோ அறிவித்துள்ள இரண்டாவது சலுகையைப் பற்றி விரிவாக கூறவேண்டும் என்றால், ரூ.75-க்கு ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு கூடுதலாக 75 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும், ரீசார்ஜ் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் அடிப்படையில் மாதம் ஒன்றிற்கு 300 இலவச நிமிடங்களை தருகிறது ஜியோ நிறுவனம். கண்டிப்பாக இந்தசலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ஏர்டெல் நிறுவனத்தின் சலுகைகள்

ஏர்டெல் நிறுவனத்தின் சலுகைகள்

ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த கொரோனா காலத்தில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சலுகையை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். அதாவது ரூ.49 மதிப்புடைய ரீசார்ஜ் கூப்பன், குறைந்த வருவாய் உடைய 5.5 கோடி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.49 மதிப்புடைய ரீசார்ஜ் கூப்பன் ஆ

குறிப்பாக ரூ.49 மதிப்புடைய ரீசார்ஜ் கூப்பன் ஆனது 100எம்பி டேட்டா, 38 ரூபாய் டாக் டைம், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் 79 ரூபாய் கூப்பன் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதன் பலன் இரட்டிப்பாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

270 கோடி ரூபாய் மதிப்பிலான பலன்கள்

எனவே ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிவித்த சலுகை வாயிலாக, 270 கோடி ரூபாய் மதிப்பிலான பலன்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea announces free offers for customers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X