Home
News

ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்த வோடபோன் ஐடியா.!

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் விரைவில் தனது 5ஜி சேவையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவங்களும் 5ஜி சேவை சோதனையை
துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.199-

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.199-ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் சலுகையானது பல்வேறு பயனர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

அதாவது வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பு தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது.ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த திட்டதில் 1.5ஜிபி டேட்டா நன்மையும், 28 நாட்கள் வேலிடிட்டியும்வழங்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை முதலில் telecomtalk.info வலைத்தளம் வெளியிட்டது.

விர வரம்பற்ற குரல் அழைப்பு நன்

இது தவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், வீ மூவிஸ் & டிவி பயன்பாட்டின் கூடுதல் நன்மை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அண்மையில் ஏர்டெல் நிறுவனமும் கூடுதல் சலுகைகளை அறிவித்தது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் முன்பு ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த சலுகை பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும்

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பு 56ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது. தற்போது 70ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், அமேசான் ப்ரைம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் முன்பு 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ மட்டுமே வழங்கியது. ஆனால் இப்போது இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 30ஜிபி அளவிலான மொத்த டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்குஒரு மாதத்திற்கான இலவச அணுகல், வரம்பற்ற பாடல் மாற்றங்களுடன் இலவச ஹெலோட்டூன்ஸ், இலவச விங்க்மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea announces additional data benefits on Rs 199 prepaid plan: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X