Home
News

புது பேமிலி பிளான், 25% டிஸ்கவுண்ட், 40 லட்சம் இன்சூரன்ஸ்.. அடுக்கடுக்காக அசத்தும் Vodafone Idea நிறுவனம்!

வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் எதிர்காலமே இந்திய அரசாங்கத்தில் கையில் இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் ஆனது அதன் சில "விலை உயர்ந்த" திட்டங்களில் தள்ளுபடியை அறிவித்துள்ளது

அந்த "விலை உயர்ந்த" திட்டங்கள் வோடாபோன் ஐடியாவின் சர்வதேச ரோமிங் (IR) பேக்குகள் ஆகும். மேலும் இந்த தள்ளுபடி இரண்டாம் நிலை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது? சரி - இங்கே இரண்டாம் நிலை வாடிக்கையாளர்கள் அல்லது இரண்டாம் நிலை எண்கள் என்றால் என்ன?

Vi: புது பேமிலி பிளான், 25% டிஸ்கவுண்ட், 40 லட்சம் இன்சூரன்ஸ்!

எடுத்துக்காட்டுக்கு ஒரு பேமிலி போஸ்ட்பெய்டு திட்டம் இருப்பதாக வைத்துக்கொள்வோம், பின்னர் அதில் ஒரு முதன்மை பயனர் இருக்கிறார், பின்னர் ஒரு இரண்டாம் நிலை பயனர் இருக்கிறார். சர்வதேச ரோமிங் (IR) பேக்குகளை வாங்கும்போது இரண்டாம் நிலை பயனர் நிறுவனத்திடமிருந்து 10% தள்ளுபடியை பெறுவார்.

வி-ஆல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சமீபத்திய சலுகையின் கீழ் - ரெட்எக்ஸ் பேமிலி மெம்பர்கள் ஐஆர் பேக்குகளில் 25% தள்ளுபடியை பெறுவார்கள். இந்த சலுகைகள் ரூ.2,999 மீதான 10, 14 மற்றும் 30-நாள் பேக்குகளுக்கு பொருந்தும். வி நிறுவனத்தின் பேமிலி போஸ்ட்பெய்டு திட்டங்கள் ரூ.701 இல் தொடங்குகின்றன, 2 முதல் 5 மெம்பர்களை சேர்க்கும் விருப்பங்களும் கிடைக்கும்.

இதற்கு மேல், வி வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் போஸ்ட்பெய்டு கணக்கில் 8 இரண்டாம் நிலை உறுப்பினர்களை, ஒரு உறுப்பினருக்கு ரூ.299 என்கிற கட்டணத்தின் கீழும் சேர்க்கலாம். வி சமீபத்தில் ரூ.1601 மதிப்புள்ள ரெட்எக்ஸ் பேமிலி பிளானையும் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்தத் திட்டம் "ஒரே நேரத்தில்" இரண்டு உறுப்பினர்களுக்கானது.

இந்த திட்டத்தின் கீழ் உள்ள 2 பயனர்களும் வரம்பற்ற டேட்டா, ஐஆர்சலுகைகள் மற்றும் விமான நிலைய லவுஞ்ச் அணுகலை பெறுவார்கள். மேலும், வோடபோன் ஐடியா ப்ளூ ரிப்பன் நன்மைகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது பயனர்கள் தங்கள் சாமான்களை இழந்தால், 1 பைக்கு ரூ.99 கட்டணத்தில் ரூ.19,800 கிளையம் செய்யலாம்

ரெட்எக்ஸ் திட்டம் ஆண்டுக்கு ரூ.2,999 மற்றும் இரண்டாவது ஐஆர் பேக்கில் ரூ.750 மதிப்புள்ள 25% தள்ளுபடியுடன் வருகிறது. இதை மெம்பர்களில் எவர் வேண்டுமானாலு பயன்படுத்தலாம். இதனுடன், வி நிறுவனம் ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, அனைத்து வி ஐஆர் பேக்குகளுடனும் ரூ.285 க்கு ரூ.40 லட்சத்திற்க்கான பயணக் காப்பீட்டு திட்டத்த்தையும் வழங்குகிறது.

ஒட்டுமொத்தமாக இந்திய டெலிகாம் சந்தையில் அதிக கட்டணம் செலுத்தும் மொபைல் வாடிக்கையாளர் தளத்தை கைப்பற்றும் நோக்கத்தின் கீழ் வி நிறுவனம் பல வகையான சலுகைகள் மற்றும் நன்மைகளை வழங்குகிறது. ஆனாலும் இந்நிறுவன்தன் நிலைமை தொங்கலில் தான் உள்ளது. ஏனென்றால் வி நிறுவனமானது அதன் தோள்களில் உள்ள கடன் சுமை காரணமாக சிரமப்பட்டு வருகிறது.

இந்த கடன், பெரும்பாலும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue - AGR) பாக்கிகளை உள்ளடக்கியது. டெலிகாம்டால்க் அறிக்கையின்படி இது ரூ.80,000 கோடிக்கு மேல் செல்கிறது. இப்போதைக்கு வி நிறுவனத்தின் இந்த சிக்கலை தீர்க்கக்கூடியது இந்திய அரசாங்கம் மட்டுமே. மேலும் வோடாபோன் ஐடியாவானது கடனை குறைப்பதோ அல்லது அதை நீக்குவதோ கோரிக்கை வைக்கவில்லை, மாறாக அதன் வணிகத்திற்கு சாத்தியமான வகையில் அதை மறுசீரமைப்பதே முதன்மையான கோரிக்கையாக உள்ளது

இப்படியாக வோடபோன் ஐடியாவின் 100% எதிர்காலம் அரசாங்கத்தின் கையில் இல்லாவிட்டாலும், பெரும்பாலும் இது இந்திய அரசாங்கத்தையே சார்ந்துள்ளது. ஏனென்றால் இப்போதைக்கு வி நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரராக இருப்பது இந்திய அரசாங்கம் தான். ஆக இந்நிறுவனம் நலிவடைவதை அரசாங்கமும் விரும்பாது.

இந்திய அரசாங்கம் வி நிறுவனத்தின் ஏஜிஆர் நிலுவை தொகையை தீர்த்து வைக்க முடிந்தால், அது வி நிறுவனத்திற்கு கிடைக்கும் நிதிகளுக்கான கதவுகளை திறக்கக்கூடும். மேலும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் பங்கு முதலீட்டாளர்களை பெறவும் அனுமதிக்கும். சமீபத்தில் 2016-17 தொடர்பான ஏஜிஆர் நிலுவை தொகையை கேட்கும் முடிவை இந்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Announced New Family Plan New Offers Including Discount on IR Packs and 40 Lakh insurance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X