Jio அம்பானி லேட்டு.. Airtel-ன் 300GB FREE ஆபரை அப்படியே காப்பி அடித்த Vi.. எந்தெந்த திட்டங்களில் கிடைக்கும்?
இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) ஆனது அதன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு - லிமிட்லெஸ் டேட்டா அல்லது அன்லிமிடெட் டேட்டாவை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களுக்கு மட்டுமே இந்நிறுவனம் வரம்பற்ற டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
வி நிறுவனம் இதுபோன்ற ஒன்றை அறிமுகப்படுத்துவது இது முதல் முறை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். இப்போதைக்கு, இந்த ஆபர் ஆந்திரப் பிரதேச வட்டத்தில் உள்ள பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது. இந்த நன்மைக்கான திட்டங்கள் ரூ.451 இல் தொடங்கி ரூ.1,201 வரை செல்கிறது.

நினைவூட்டும் வண்ணம் பார்தி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் தான் இதுபோன்ற ஒரு நன்மையை அறிமுகப்படுத்தி இருந்தது. மேலும் ஏர்டெல்லை போலவே வி இந்த நிறுவனமும் டேட்டா பயன்பாடு ஒரு மாதத்திற்கு தோராயமாக 300GB என்கிற கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. இந்த லிமிட்டிற்கு பின்னர் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, வோடபோன் ஐடியாவின் தனிப்பட்ட போஸ்ட்பெய்டு திட்டங்கள் வெறும் ரூ.451 இல் தொடங்குகின்றன. இந்த விலை வரம்பில், நீங்கள் வரம்பற்ற டேட்டாவை (4G மற்றும் 5G) பெறுகிறீர்கள் என்றால் உண்மையிலேயே இது மிகவும் அருமையான விஷயம் ஆகும்.
வி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களை போஸ்ட்பெய்டு திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதில் இன்னொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், வரம்பற்ற டேட்டாவை தவிர, பயனர்கள் வி-யின் இந்த திட்டத்தின் மூலம் ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகளையும் பெறுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் தற்போது வோடபோன் ஐடியாவின் வலைத்தளத்தில் பிரதிபலிக்க தொடங்கியுள்ளன. இது போஸ்ட்பெய்டு மொபைல் வணிகத்தை விரைவுபடுத்தவும் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும் வி-க்கு உதவும். போஸ்ட்பெய்டு மொபைலை பொறுத்தவரை வி ஏற்கனவே சிறந்த போட்டியாளர்களில் ஒன்றாக உள்ளது. இதன் மூலம், போட்டியில் இது இன்னும் முன்னேறும்.
இந்த விலைப் பிரிவில் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு வரம்பற்ற 4ஜி டேட்டாவை அறிமுகப்படுத்த மீதமுள்ள ஒரே நிறுவனம் - முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே உள்ளது. பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் வி மற்றும் ஏர்டெல் தான் தாமதமாக வரும், ஆனால் இந்த முறை ஜியோ தான் லேட்டு!
ஜியோவும் இந்த மாற்றத்தை எதிர்காலத்தில் (கூடிய விரைவில், வரும் நாட்களில்) செய்யும் என்று நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம், மேலும் மற்ற இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் (ஏர்டெல் மற்றும் விஐ) இந்த சலுகையை மேலும் பல தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வோடபோன் ஐடியா பல முக்கிய வட்டங்களில் அதன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மைக்கான நுழைவு புள்ளியை திருத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது மும்பை, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியானா போன்ற சந்தைகளில், ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் இனி அன்லிமிடெட் 5ஜி-க்கான அணுகலை வழங்காது; இனிமேல் ரூ.349 தான் பேஸிக் அன்லிமிடெட் 5ஜி டேட்டாகான நுழைவாயிலாக இருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் வோடாபோன் ஐடியாவின் ரூ.349 திட்டமானது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற 5ஜி டேட்டா அணுகலையும் வழங்குகிறது. இதோடு சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications