வேலை வாய்ப்பு, கேம் அணுகலுடன் VI app: யூஸ் பண்ணா கேஷ்பேக் மற்றும் ரிவார்ட் காயின் உறுதி!

|

விஐ நிறுவனம் தனது செயலியில் பிரத்யேகமாக கூட்டாண்மையை உருவாக்கி இசை, வேலை வாய்ப்பு தேடல், கேம்கள் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது. இருப்பினும் மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் திட்ட பயன்பாடுகள் அதிகரித்து வரும் காரணத்தால் விஐ செயலியை ஊக்குவிக்க நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக விஐ எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

செயலியை பயன்படுத்த வைக்கும் முயற்சியில் VI

செயலியை பயன்படுத்த வைக்கும் முயற்சியில் VI

விஐ பயனர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு தங்களது செயலியை பயன்படுத்த வைக்கும் முயற்சியில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. VI App மூலம் பயனர்கள் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக் மற்றும் 30 வெகுமதி நாணயங்கள் வழங்கப்படும் என நிறுவனம் தனது இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளது. விஐ நிறுவனம் ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேம்பட்ட அணுகலுடன் கிடைக்கும் VI App

மேம்பட்ட அணுகலுடன் கிடைக்கும் VI App

பெரும்பாலான பயனர்கள் தங்களது மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் மூன்றாம் தரப்பு செயலியை தான் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக ஏராளமானோர் ரீசார்ஜ் செய்ய அணுகுவது கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் தான். எனவே விஐ பயனர்கள் ரீசார்ஜ் செய்ய தங்களது விஐ செயலியை பயன்படுத்த வைக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. VI App இல் Vodafone Idea பயனர்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

நிறுவனம் ஏன் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது?

நிறுவனம் ஏன் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது?

Vodafone Idea (VI) தனது செயலியை சூப்பர் செயலியாக வளர்ப்பதற்கு முதலீடு செய்து வருகிறது. அதாவது கேம்கள் விளையாடுவது, வேலை தேடுவது, இசை போன்ற அணுகலுக்கு விஐ முதலீடு செய்திருக்கிறது. இந்த செயலி மூலம் நுகர்வோர் விரும்பும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து சூப்பர்-பிளாட்ஃபார்மாக விஐ ஆப் இருக்க வேண்டும் என நிறுவனம் விரும்புகிறது. இதன் காரணமாகவே VI App மூலம் பயனர்கள் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக் மற்றும் 30 வெகுமதி நாணயங்கள் வழங்கப்படும் என நிறுவனம் தனது இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளது.

இசை வழங்கல், வேலை வாய்ப்புத் தேடல், கேம் அணுகல்

இசை வழங்கல், வேலை வாய்ப்புத் தேடல், கேம் அணுகல்

விஐ பயன்பாட்டில் இசையை வழங்கவும், வேலை வாய்ப்புகளைத் தேடவும், கேம்களை விளையாடவும் நிறுவனம் கூட்டாண்மையை உருவாக்கி இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பயனர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பயன்படுத்துகின்றனர். விஐ செயலி மூலம் ஒருமுறை ரீசார்ஜ் செய்துவிட்டால், இதில் உள்ள நன்மைகளை அனைவரும் அறிந்து கொள்வார்கள். எனவே பயனர்கள் தொடர்ந்து விஐ பயன்பாட்டை தான் அணுகுவார்கள். இதன்மூலம் விஐ செயலி பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மூன்றாவது இடத்தில் Vodafone Idea (VI)

மூன்றாவது இடத்தில் Vodafone Idea (VI)

இந்தியாவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது. இதில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக ஜியோவும், இரண்டாவது அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக ஏர்டெல்லும் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் Vodafone Idea (VI) இருக்கிறது. தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் விஐ, அதே நேரத்தில் ஒவ்வொரு செயலிலும் வருவாய் ஈட்ட விரும்புகிறது என கூறப்படுகிறது. அதன்படி விஐ நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களை இழந்த விஐ நிறுவனம்

வாடிக்கையாளர்களை இழந்த விஐ நிறுவனம்

சமீபத்தில் வெளியான டிராய் தகவலில், ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளதாகவும் வோடபோன் ஐடியா(விஐ) வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 2022-ல் மட்டும் சுமார் 15.7 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை விஐ இழந்துள்ளதாக டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.9 கோடியாக குறைந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அசுர வளர்ச்சியில் ஜியோ

அசுர வளர்ச்சியில் ஜியோ

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பயணித்த பாதையை ஜியோ வருகைக்கு முன், ஜியோ வருகைக்கு பின் என இரண்டு கட்டமாக பிரிக்கலாம். காரணம், அந்த அளவிற்கு ஜியோ வருகைக்கு பின் அதன் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Vodafone idea announced Cashback and Reward Coins For Using VI APP

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X