Home
News

குஷி.. குஷி.. குஷிதான்.. 8 சிட்டிகளில் வோடபோன் ஐடியா 5ஜி.. வெறும் ரூ.299 முதல் திட்டங்கள்.. வேகம் எடுத்தாச்சு!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) அடித்து பிடித்து அதனுடைய 5ஜி சேவைகளை விரிவுப்படுத்தி வருகிறது. இப்போது, நாடு முழுவதும் இருக்கும் 8 சிட்டிகளில் 5ஜி சேவைகளை தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே, 9 நகரங்களில் சேவையை கொடுத்து வருகிறது. இப்போது, மொத்த எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் போனால், அடுத்த சில மாதங்களில் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவைகள் கிடைத்துவிடும். இதனால், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் குஷியில் இருக்கின்றனர். இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரூ, பீகார் மாநிலத்தில் பாட்னா, டெல்லி-என்சிஆர் மற்றும் சண்டிகர் ஆகிய சிட்டிகளில் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் ஒரே மாதிரியான அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

குஷி.. குஷி.. குஷிதான்.. 8 சிட்டிகளில் வோடபோன் ஐடியா 5ஜி.. எவை?

மேலும், எந்தெந்த சிட்டிகளில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்பதையும் அறிவித்திருந்து. இந்த பட்டியலின்படி அடுத்தடுத்த சிட்டிகளில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இப்போது, கூடுதலாக 8 சிட்டிகளில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத், ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா சிட்டிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் நாசிக் ஆகிய சிட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. மேலும், கேரள மாநிலத்தில் இருக்கும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய சிட்டிகளில் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

கேரளாவில் கிடைத்திருப்பதால், அடுத்தகட்ட அறிமுகத்தில் அண்டை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டின் சிட்டிகளில் அன்லிமிடெட் 5ஜி சேவைகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால், இங்கிருக்கும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கின்றனர். முன்னதாக மைசூர், நாக்பூர், ஜெய்ப்பூர் மற்றும் சோனிபட் ஆகிய சிட்டிகளில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை தொடங்கப்பட்டது.

மாநிலங்களின் அடிப்படையில் பார்க்கையில், மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், டெல்லி, ஆந்திரா மற்றும் கேரளா போன்றவற்றில் அதிவேகமாக வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது, வோடபோன் ஐடியா 5ஜி திட்டங்கள் (Vodafone Idea 5G Plan) எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பெங்களூரூ உள்ளிட்ட சில சிட்டிகளில் ரூ.299 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்தே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இது மும்பை போன்ற பெரிய நகரங்களில் மாறுபடுகிறது. ஆனால், தென் மாநிலங்களில் ரூ.299 விலையில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ.299 திட்ட விவரங்கள்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவானது, 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும். அதே நேரத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் பெற்று கொள்ளலாம். இதுபோக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் இந்த 5ஜி திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.

மற்ற சலுகைகள் வழக்கம்போலவே இருக்கின்றன. ஆகவே, இந்த விலைக்கு ஏற்ப 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்கள் தினசரி லிமிட்டில் கொடுக்கப்படுகிறது. இதே விலையில் தமிழ்நாட்டில் அன்லிமிடெட் 5ஜி சேவை தொடங்கப்பட்டால், இதே திட்டம் வர அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Announced 5G Services To Eight Cities Across India Check Which City in Your State
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X