தினசரி ரூ.10 மட்டுமே- 84 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2 ஜிபி டேட்டா: விஐ, ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்!

|

ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனங்கள் 5ஜி சோதனையை மேற்கொண்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த ஆண்டு 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனம் தினசரி ரூ.10 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல்

வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல்

வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ரூ.839 செலவில் மொத்தம் 168 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களை வழங்குகின்றன. இதன்மூலம் ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் வாடிக்கையாளர்களுக்கு தோராயமாக ரூ.5 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களின் மூலம் பயனர்களுக்கு டேட்டா மட்டுமின்றி வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை சமீபத்தில் உயர்த்தி அறிவித்தது. மொபைல் திட்டங்களின் விலை ஏற்றத்தால் பல பயனர்களும் ஆச்சரியத்துக்கு உள்ளாகினர். 4ஜி தேவை இருந்தும் விலை ஏற்றத்தால் பலரும் மொபைல் சேவைகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். வோடபோன் ஐடியா (விஐ) மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இரண்டு திட்டங்களும் தினசரி 2 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.839 விலைக்கு வழங்குகின்றன. ப்ரீபெய்ட் கட்டண உயர்வுக்கு முன்பு இந்த திட்டங்கள் ரூ.700 ஆக இருந்த நிலையில் தற்போது இதே திட்டம் ரூ.839 ஆக இருக்கிறது. இதன்படி தினசரி தோராயமாக ரூ.10 என்ற விலையில் திட்டம் வழங்கப்படுகின்றன.

4ஜி ரீசார்ஜ் திட்டம் விலை உயர்வு

4ஜி ரீசார்ஜ் திட்டம் விலை உயர்வு

4ஜி ரீசார்ஜ் திட்டம் விலை உயர்வு அறிவித்த பிறகு அதன் விலை அசௌகரியமாக இருந்தாலும் 84 நாட்களுக்கு ரூ.839 ப்ரீபெய்ட் என சிந்தித்து பார்த்தால் தினசரி ரூ.10 மட்டுமே ஆகும். வோடபோன் ஐடியா, ஏர்டெல் ரூ.839 திட்டங்கள் மொத்தம் 168 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. தினசரி ரூ.10 என்ற செலவில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. அதாவது ரூ.5-க்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி இலவச வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

கூடுதல் சலுகைகள்

கூடுதல் சலுகைகள்

இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, விங்க் மியூசிக், ஃபாஸ்டேக் கேஷ்பேக், ஷா அகாடமி, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் மற்றும் பல இலவச அணுகல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பிங்கி ஆல் நைட், வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது. வோடபோன் ஐடியா ரூ.839 திட்டத்தில் விஐ மூவிஸ் & டிவி க்ளாஸிக் இன் ஓவர் தி டாப் (ஓடிடி) சலுகைகள் சந்தாவை வழங்குகின்றன. ப்ரீபெய்ட் கட்டண உயர்வுக்கு பிறகு வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்திய புதிய சலுகைதான் டேட்டா டிலைட்ஸ் ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2 ஜிபி மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள்உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. Amazon Prime Video Mobile Edition, Free Hello Tunes மற்றும் Wynk Music ஒரு மாத இலவச சோதனை போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

வோடபோன் ஐடியாவின் 2.5ஜிபி தினசரி டேட்டா திட்டம்

வோடபோன் ஐடியாவின் 2.5ஜிபி தினசரி டேட்டா திட்டம்

வோடபோன் ஐடியாவின் 2.5ஜிபி தினசரி டேட்டா திட்டம் ரூ.409 விலைக்குக் கிடைக்கிறது. மேலும் இது பட்டியலில் மிகவும் மலிவானது. ஆனால், இந்த திட்டமும் கூட 28 நாட்கள் மிகக் குறைந்த வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் பெறுவார்கள். ஆனால் கூடுதல் Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் Vi Movies & TV இன் இலவச ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகள் நுகர்வோருக்கு உள்ளன. Vi Hero அன்லிமிடெட் நன்மைகளில் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights போன்ற கூடுதல் சலுகைகள் அடங்கும்.

குடும்பங்களை ஒருங்கிணைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டம்

குடும்பங்களை ஒருங்கிணைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டம்

Vi ஆனது மொத்தம் ஐந்து குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. பட்டியலில் உள்ள முதல் திட்டமானது ரூ. 699 விலையில் இரண்டு உறுப்பினர்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. முதன்மை இணைப்புகள் மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு 40 ஜிபி டேட்டா உடன் மொத்தம் 80 ஜிபி டேட்டாவை இந்தத் திட்டம் வழங்குகிறது. பயனர்கள் மாதம் 3000 எஸ்எம்எஸ் உடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் நன்மையையும் பெறுகிறார்கள். வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் குரல் அழைப்புகளுடன், இந்த திட்டத்துடன் வரும் கூடுதல் நன்மை Vi Movies மற்றும் TV -க்கான அணுகல் மட்டுமே.

Best Mobiles in India

English summary
Vodafone Idea and Airtel Offers Daily 2GB data, 84 days validity and More: only Rs.10 Per Day

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X