இந்த சேவையை இழுத்து மூடுறோம்.. Vodafone CEO திடீர் அறிவிப்பு.. அம்பானியின் SHUTDOWN சூட்சமம் சக்ஸஸ்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் "இரண்டாவது போட்டியாளர்" ஆக இருந்தாலும் கூட ஜியோவின் சமீபத்திய பரிந்துரையை ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு முக்கிய அறிவிப்பை வோடபோன் ஐடியா (Vodafone Idea) வெளியிட்டுள்ளது. அதென்ன அறிவிப்பு? இதன்கீழ் எந்த சேவை நிறுத்தப்படவுள்ளது? இதோ விவரங்கள்:
சமீபத்தில் டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, 5ஜி ஈகோசிஸ்டம் வழியிலான டிஜிட்டல் மாற்றம் (Digital Transformation through 5G Ecosystem) என்கிற தலைப்பில் ஒரு ஆலோசனை கட்டுரையை வெளியிட்டு இருந்தது.

அதற்கு பதிலளித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி ஈகோசிஸ்டமை சாத்தியப்படுத்த இந்தியாவில் உள்ள 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகள் ஷட்டவுன் (Shutdown) செய்யப்பட வேண்டும் (அதாவது 2ஜி மற்றும் 3ஜி சேவைகள் நிறுத்தப்பட வேண்டும்); இதற்காக இந்திய அரசாங்கம் ஒரு புதிய கொள்கையை (New Policy) உருவாக்க வேண்டும்; இதன்மூலம் தேவையற்ற நெட்வொர்க் செலவுகள் தவிர்க்கப்படும்; அனைவரும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு இடம்பெயர முடியும் என்று பரிந்துரைள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பரிந்துரையுடன் வோடபோன் ஐடியா ஒற்றுபோய் உள்ளது போல் தெரிகிறது. வோடபோன் நிறுவனமானது வருகிற நிதியாண்டில் தனது 3ஜி சேவையை முழுமையாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியா லிமிடெட்டின் சிஇஓ-வான அக்ஷயா மூந்த்ரா (Vodafone Idea Limited CEO Akshaya Moondra), 3ஜி சேவையை FY25-இல் முழுமையாக நிறுத்த பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா (Maharashtra), குஜராத் (Gujarat), மும்பை (Mumbai), கொல்கத்தா (, Kolkata) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) ஆகிய வட்டங்களில் 3ஜி சேவையை முழுமையாக நிறுத்தி விட்டதாகவும் வோடபோன் ஐடியா குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஆனது 4ஜி-கு மறுசீரமைக்கப்படும். இது நெட்வொர்க் திறனை அதிகரிக்கும் மற்றும் விஐ வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இண்டர்நெட் / டேட்டா அனுபவத்தை வழங்கும்.
வோடாபோன் ஐடியாவின் நெட்வொர்க்குகளில் 3ஜி போன்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும், இந்நிறுவனம் தொடர்ந்து 2ஜி சேவைகளை வழங்கி வருகிறது. 2ஜி சேவை எப்போது நிறுத்தப்படும் என்பது பற்றி வோடாபோன் எதுவும் கூறவில்லை. மற்றொரு முக்கிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் (Airtel), முக்கிய சந்தை பங்கைக் கொண்டுள்ளதால், அது தொடர்ந்து 2ஜி சேவையை வழங்கி வருகிறது.

குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவில் சுமார் 300 மில்லியன் 2ஜி / 3ஜி வாடிக்கையாளர்கள் ஃபீச்சர் போன்களை (Feature Phones) பயன்படுத்துகின்றனர். இந்த இடத்தில் ஜியோபாரத் பிளாட்அஃக்பார்மை (JioBharat platform) அறிமுகப்படுத்தி, ஃபீச்சர் ஃபோன் பயனர்களை 4ஜி ஃபீச்சர் போனுக்கு அப்கிரேட் (Upgrade) செய்யும் ரிலையன்ஸ் ஜியோவின் முயற்சியும் குறிப்பிடத்தக்கது,.
வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் 3ஜி நெட்வொர்க்குகளை ஷட்டவுன் செய்வதன் மூலம் பயனடையுமா என்று கேட்டால்.. நிச்சயம் பயன் அடையும். 3ஜி சேவையை மூடுவதால் வோடாபோன் நிறுவனத்தால்புதிய 4ஜி சந்தாதாரர்களை (New 4G subscribers) சேர்க்க முடியும். ஏற்கனவே நிதி சிக்கலில் உள்ள வோடாபோன் நிறுவனம், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இதுவொரு முக்கிய படியாக இருக்கும்.
Q3 FY24-இன் முடிவில், வோடாபோன் ஐடியா அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் சுமார் 125.6 மில்லியன் 4ஜி வயர்லெஸ் சந்தாதாரர்களை (4G wireless Subscribers) கொண்டிருந்தது. அதேசமயம் இன்னுமும் இது 90 மில்லியன் 2ஜி / 3ஜி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இப்படியாக வோடாபோன் ஐடியாவின் ஒட்டுமொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 215 மில்லியனாக உள்ளது.


Click it and Unblock the Notifications








