ஆடிப்போன Airtel.. ரூ.200 க்கு 30GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், SMS.. Vodafone Idea வின் தரமான பதிலடி!
விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது ரூ.200 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் அதன் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் (Prepaid Recharge Plans Under Rs.200) தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்து உள்ளது.
டெலிகாம்டாக் (TelecomTalk) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, வோடாபோன் ஐடியா அதன் ரூ.199 மற்றும் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டங்களின் மீது சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்கீழ் வழக்கமான நன்மைகளுடன் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், இது குறிப்பிட்ட டெலிகாம் வட்டத்திற்கு ஏற்றதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது இது இந்தியா முழுவதும் கிடைக்கும் சலுகை அல்ல.

வழக்கமாக வோடாபோன் ஐடியாவின் ரூ.199 திட்டமானது 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். தற்போது இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1ஜிபி டேட்டாவை வழங்குவதாக கூறப்படுகிறது, இதன் மூலம் ரூ.199 திட்டத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டா 30ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது
மறுகையில் உள்ள ரூ. 179 ப்ரீபெய்ட் திட்டமானது வழக்கமாக 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 4 நாட்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியின் கீழ் 1ஜிபி டேட்டா நன்மையை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.
விஐ நிறுவனத்தின் போட்டியாளரான பாரதி ஏர்டெல் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக அதன் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் ரூ.189 க்கு புதிய பேஸிக் ரீசார்ஜ் ஒன்றை அறிமுகம் செய்து இருந்தது. அதன் விளைவாகவே வோடபோன் ஐடியா இந்த சலுகைகளை அறிவித்துள்ளது போல் தெரிகிறது. ஏர்டெல்லின் ரூ.189 ரீசார்ஜ் ஆனது 21 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.
ஏர்டெல்லின் புதிய ரூ.189 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1ஜிபி மொபைல் டேட்டா மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதாவது இது கிட்டத்தட்ட வோடாபோனின் ரூ.199 மற்றும் ரூ.179 ஆகிய திட்டங்கள் வழங்கும் அதே நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் வேலிடிட்டி சற்றே குறைவு (21 நாட்கள் VS 28 நாட்கள்)!
வோடாபோன் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் மைசூரில் அதன் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியது. அதோடு குறிப்பிட்ட நகரத்தில் உள்ள 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அதன் சந்தாதாரர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரையும் அறிவித்துள்ளது
குறைந்தபட்சம் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்க வோடாபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்கீழ் வோடபோன் ஐடியா அதன் 5ஜி திட்டங்களுடன் 300ஜிபி எப்யுபி (300GB FUP), அதாவது நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (Fair Usage Policy) கீழ் 300ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா ஒவ்வொரு மாதமும் ரீசெட் (Reset) செய்யப்படும்.
உங்களிடம் வோடாபோன் ஐடியாவின் 4ஜி சிம் கார்டு இருந்தால், 5ஜி சேவைகளை பெறுவதற்கு வேறு எந்த சிம் கார்டுக்கும் மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதும், ஒருவேளை உங்களிடம் 2ஜி சிம் கார்டு இருந்தால், நீங்கள் விஐ நிறுவனத்திடமிருந்து 4ஜி அல்லது 5ஜி சிம்மிற்கு அப்கிரேட் ஆக வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








