Home
News

இதெப்படி நடந்துச்சு? மண்டைய பிச்சுக்கும் அம்பானி.. Vodafone Idea-வின் உண்மையான கம்பேக்.. TRAI-யே சொல்லிடுச்சு!

இதெப்படி நடந்தது.. அதுவும் 17 மாதங்களுக்கு பிறகு.. இதெப்படி சத்தியம்? என்று முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் மட்டுமின்றி, வோடாபோன் ஐடியா (Vodafone Idea) வாடிக்கையாளர்களே ஷாக் ஆகும்படியான ஒரு விஷயம் நடந்து உள்ளது!

அதிர்ச்சி அடையும் அளவிற்கு வோடாபோன் ஐடியா நிறுவனம் அப்படி என்ன செய்துள்ளது? இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமும், பார்தி மிட்டலின் ஏர்டெல் (Airtel) நிறுவனமும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இந்த விஷயத்தில் டிராய் என்ன கூறியுள்ளது? இதோ விவரங்கள்:

Vodafone Idea-வின் உண்மையான கம்பேக்.. TRAI-யே சொல்லிடுச்சு!

டிராய் (TRAI) என்று அறியப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) சமீபத்திய அறிக்கையின்படி விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா நிறுவனமானது கடந்த 17 மாதங்களில் முதல் முறையாக ஆக்டிவ் யூசர்களை (Actice Users) சேர்த்துள்ளது.

வோடாபோன் ஐடியா சேர்த்துள்ள ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை மிகவும் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட, கடந்த 1.5 ஆண்டுகளாக இந்நிறுவனம் சந்தித்த இழப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, உண்மையிலேயே இதுவொரு சிறப்பான வளர்ச்சி தான். நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் கடந்த பல மாதங்களாகவே மில்லியன் கணக்கான ஆக்டிவ் யூசர்களை இழந்து வருகிறது.

Vodafone Idea-வின் உண்மையான கம்பேக்.. TRAI-யே சொல்லிடுச்சு!

ஒருகட்டத்தில் வோடாபோன் ஐடியாவின் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 200 மில்லியனுக்கும் கீழே சரிந்தது. இருப்பினும் கடந்த செப்டம்பர் 2023 இல், வயர்லெஸ் ஆக்டிவ் யூசர்களை சேர்த்து.. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்லை மட்டுமின்றி.. ஒட்டுமொத்த இந்திய டெலிகம் துறையையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இவ்வளவு ஆச்சர்யப்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது? ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை போல, வோடாபோன் ஐடியாவானது எந்த விதமான 5ஜி சேவைகளையும் தற்போது வரை வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்நிறுவனம் தனது 5ஜி அறிமுகம் (5G Launch) குறித்து பேசவே ஆரம்பிக்கவில்லை.

Vodafone Idea-வின் உண்மையான கம்பேக்.. TRAI-யே சொல்லிடுச்சு!

இந்நிலைப்பாட்டிலும் கூட வோடாபோன் ஐடியா நிறுவனத்தால் சந்தாதாரர்களை சேர்க்க முடிந்துள்ளது. இது வோடாபோன் ஐடியா என்கிற நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ஆக கடந்த 17 மாதங்களாக சரிவை கண்ட வோடபோன் ஐடியாவின் "உண்மையான கம்பேக்" என்று இதை கூறுவதில் எந்த தவறும் இல்லை!

அப்படி என்ன கம்பேக்? எந்தெந்த நிறுவனம் எவ்வளவு ஆக்டிவ் யூசர்களை சேர்த்துள்ளது? டிராய் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த செப்டம்பர் 2023-இல், பணவசதி இல்லாத மற்றும் 5ஜி சேவையை வழங்காத டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன வோடாபோன் ஐடியா 0.4 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் யூசர்களை சேர்த்துள்ளது.

Vodafone Idea-வின் உண்மையான கம்பேக்.. TRAI-யே சொல்லிடுச்சு!

இருப்பினும் அதே மாதத்தில் அதிக ஆக்டிவ் வயர்லெஸ் பயனர்களை சேர்த்ததுள்ளது, இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோ தான். இந்நிறுவனம் 3.13 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் பயனர்களை சேர்த்துள்ளது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் வெறும் 0.61 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் பயனர்களை மட்டுமே சேர்க்க முடிந்துள்ளது.

மறுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) 0.63 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் பயனர்களை இழந்துள்ளது. இப்படியாக கடந்த செப்டம்பர் 2023 இன் இறுதியில் ஜியோவிடம் 420.27 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் யூசர்களும், ஏர்டெல்லிடம் 376.15 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் யூசர்களும், வோடபோன் ஐடியாவிடம் 199.79 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் யூசர்களும், பிஎஸ்என்எல்-டம் 49.99 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் யூசர்களும் இருந்தனர்.

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் இந்த மோசமான நிலைக்கு காரணம் - 4ஜி சேவை இல்லாததே காரணம். எப்போது இந்நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகம் செய்கிறதோ, அப்போது தான் இந்நிறுவனத்தால் சந்தாதாரர்களை சேர்க்க முடியும். அதுவரையிலாக பிஎஸ்என்எல்-ன் வளர்ச்சி கேள்விக்குறியாகத்தான் இருக்கும்!

ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் அடிப்படையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 449.21 மில்லியன் பயனர்களை தன்வசம் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 377.78 மில்லியன் பயனர்களை தன்வசம் கொண்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் வோடாபோன் ஐடியா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 227.53 மில்லியன் பயனர்களை தன்வசம் கொண்டுள்ளது. கடைசி இடத்தில் பிஎஸ்என்எல் உள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 93.67 மில்லியன் பயனர்களை தன்வசம் கொண்டுள்ளது. செப் 2023-ல் இந்தியா முழுவதும் 12.65 மில்லியன் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டிக்கான கோரிக்கைகளை விடுத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Added Active Users Without 5G Jio Airtel Surprised
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X