Home
News

பொறுமைக்கு கிடைத்த வெற்றி.. 21 மாதங்களுக்கு பிறகு வந்துருக்கு.. Vodafone Idea தலை தப்பித்தது!

ஒட்ட பந்தயத்தில் 3வது இடம், ஆனால் ஓடியது மொத்தம் 3 பேர் தான் என்பது போல.. ரிலையஸின் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்லுக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited) உள்ளது.

கழுத்தை நெறிக்கும் கடனால் (அதாவது சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகை - Adjusted gross revenue dues) இழுத்து மூடப்படாத குறையாக உள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 21 மாதங்கள் கழித்து ஒரு சூப்பர் ஆன குட் நியூஸ் வந்துள்ளது.

பொறுமைக்கு கிடைத்த வெற்றி.. 21 மாதங்களுக்கு பிறகு வந்துருக்கு!

அது என்னவென்றால் - 21 மாத கால நீண்ட இடைவெளிக்கு பிறகு வோடபோன் ஐடியா நிறுவனமானது ஆக்டிவ் யூசர்களை (Active Users) சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட, ஒன்றுமே இல்லாதததிற்கு இது எவ்வளவோ பராவாயில்லை என்பதே "கசப்பான உண்மை"!

இந்நிறுவனத்தின் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் 2025 இல் 171.52 மில்லியனிலிருந்து செப்டம்பர் 2025 இல் 171.54 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது வெறும் 0.02 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் அதிகரித்துள்ளனர். இது இந்நிறுவனத்தின் வணிகத்தில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இருப்பினும், இது மாறிவரும் வணிகத்தின் அடையாளமாக இருக்கலாம். கடந்த ஒரு வருடத்தில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் விட 4ஜி நெட்வொர்க்குகளில் மிக அதிகமாக முதலீடு செய்துள்ளது - வோடாபோன் ஐடியா நிறுவனம் தான். அதிக மூலதனச் செலவு காரணமாக 21 மாதங்களுக்கு பிறகு ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்து - பொறுமைக்கான பரிசு கிடைத்துள்ளது.

இது "தொங்கலில்" உள்ள வோடாபோன் ஐடியா நிறுவனம் ஆனது "பிரகாசமான எதிர்காலத்தை" நோக்கிச் செல்வதற்கான ஒரு படிக்கல்லாக கூட இருக்கலாம். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூட, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகை கோரிக்கையை இந்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறி நலிவடைந்த வி நிறுவனத்திற்கு நிவாரணம் அளித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது நிறுவனத்திற்கு நீண்டகால நிவாரணத்தை அளிக்கக்கூடும்.

மறுகையில் உள்ள முக்கிய போட்டியாளர் ஆன ஜியோ தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, ​​ஏர்டெல் நிறுவனமானது ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளது. ஏர்டெல்லின் ஆக்டிவ் யூசர்களின் தளம் 390.08 மில்லியனிலிருந்து 389.16 மில்லியன் ஆக குறைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ஆக்டிவ் யூசர்களின் தளம் 468.82 மில்லியனிலிருந்து 471.92 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆக்டிவ் யூசர்களின் தளமும் 55.39 மில்லியனிலிருந்து 55.59 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. ஆக பணம் சம்பாதிப்பதற்கும், லாப வரம்புகளை மேம்படுத்துவதற்கும் வோடபோன் ஐடியா அதிக பயனர்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

வோடபோன் ஐடியா நிறுவனமானது அதன் கடன் காரணமாக மட்டுமல்ல, தரமற்ற நெட்வொர்க்குகள் காரணமாகவும் வணிகத்தில் போராடி வருகிறது. அதைத்தான் வோடபோன் ஐடியா மாற்ற விரும்புகிறது மற்றும் அதிக மூலதனச் செலவுகளையும் செய்து வருகிறது. இப்போது நிறுவனம் நெட்வொர்க் விரிவாக்கத்தைத் தொடர அதிக பணம் திரட்டவும் திட்டமிட்டுள்ளது.

இந்திய அரசாங்கமும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டது. முக்கியமாக நிலுவையில் உள்ள நிலுவைத் தொகைகளுக்கு எதிராக நிறுவனத்தில் பங்குகளை (Equity in the company) எடுத்து கொண்டது. இது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிலுவை தொகையைக் குறைத்தது மட்டுமல்லாமல், அதற்கு சிறிது ஓய்வும் அளித்தது.

வோடபோன் ஐடியாவில் தற்போது இந்திய அரசாங்கத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் 50% க்கு மிக அருகில் உள்ளது. வோடபோன் ஐடியாவை அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனமாக (Government run company) மாற்ற இந்திய அரசாங்கத்திடம் எந்த நோக்கமும் இல்லை. எனவே, அது இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேலும் எந்த பங்குகளையும் எடுக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea added active users after 21 months But Its Not Going to Make Revenue But Positive Sign
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X