ரீசார்ஜ் உயர்வு.. இனி ரூ.40 அதிகமா கொடுக்கனும்.. Jio பாலிசியை தூக்கிய வோடபோன் ஐடியா.. எந்த கஸ்டமர்களுக்கு?
ஜியோ நிறுவனமானது, கட்டணத்தை உயர்த்தாமல், ஒரு திட்டத்தை நீக்கிவிட்டு அதே சலுகைகளுடன் மற்றொரு திட்டத்தை கொடுக்கும். இந்த திட்டத்தின் விலை அதிகமாக இருக்கும். இப்படியான பாணியில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, ரூ.40 விலை அதிகமாக ஒரு திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இது முன்பு கம்மியான விலைக்கு கிடைத்தது.
வோடபோன் ஐடியாவில் ரூ.859 விலைக்கு கிடைத்த திட்டம் சத்தமே இல்லாமல் நீக்கப்பட்டுவிட்டது. இதில் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்தன. இப்போது, அதே சலுகைகளை பெற வேண்டுமானால், வோடபோன் ஐடியா ரூ.899 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.899 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 899 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த வோடபோன் ஐடியா ரூ.899 திட்டம் கிடைக்கிறது. இந்த நாட்களில் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளாம். இது 4ஜி வேகத்தில் கிடைக்கும் டேட்டாவாக இருக்கிறது. இது முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்.
84 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 126 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஒருவேளை வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களாக இருந்தால், 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம். மாதாந்திர கேப் இருக்கும்.
அதே நேரத்தில் 4ஜி கஸ்டமர்களாக மட்டுமே இருந்தால், 1.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகளை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். அதாவது, ஆகவே, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data) சலுகை கிடைக்கும். ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது, அதே நேரத்தில் 1.5 ஜிபி டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தில் தினமும் கிடைக்கும், டேட்டாவை பயன்படுத்தாமல் போனால், அதை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த டேட்டா சலுகைகள் போக கூடுதலாக டேட்டா டிலைட் (Data Delight) சலுகையை இந்த வோடபோன் ஐடியா ரூ.899 திட்டம் கொடுத்து உள்ளது. இந்த சலுகை வழியாக மாதத்துக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதாவது, எந்த டேட்டாவும் இல்லாமல் இருக்கும்போது, பேக்கப் டேட்டாவாக இதை பயன்படுத்தி கொள்ள முடியும்.
மாதத்துக்கு 2 ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும். விஐ ஆப் (Vi App) வழியாக இந்த பேக்கப் டேட்டாவை பெறலாம். இப்போது, வழக்கமான சலுகைகளுக்கு வரலாம். இந்த வோடபோன் ஐடியா ரூ.899 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaimg Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ்களை இந்த வோடபோன் ஐடியா ரூ.899 திட்டத்தின் வழியாக அனுப்பி கொள்ளலாம். ஓடிடி பிரியர்களுக்கும் சலுகைகள் இருக்கிறது. ஆகவே, விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதே சலுகைகள் முன்பு ரூ.859 விலைக்கு கிடைத்தது. இப்போது, ரூ.40 அதிகமாக ரூ.899 விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
