Just In
- 1 hr ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 5 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 18 hrs ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 19 hrs ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
Don't Miss
- News
ஆஹா.. இந்திய குடியரசு தினத்துக்கு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.. சிறப்பே இதுதான்! கவனிச்சீங்களா!
- Sports
"சூர்யகுமார் இல்லாமல் இனி இந்திய அணி இல்லை" ரெய்னாவின் புகழ்ச்சி வார்த்தைகள்.. ரசிகர்கள் வியப்பு
- Movies
Pathaan: அமீர்கானால் முடியாததை சாதித்த ஷாருக்கான்.. கேஜிஎஃப் 2 முதல் நாள் வசூலை தாண்டிய பதான்!
- Finance
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000-ஐ தாண்டியது.. இனி சாமானியர்கள் வாங்குவது கடினம் தான்..!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
4Gல தான் நீங்க 5Gல நாங்கதான்- அதிவேக இணையத்தை பதிவு செய்த VI, நினைத்ததை விட ஃபாஸ்ட்!
இந்தியாவில் 5ஜி பயன்பாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த 5ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் அதானி குழுமம் பெரும்பான்மையோடு பங்கேற்றன.
ஏலத்தில் நான்கு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் 5ஜி சோதனைகளை நிறுவனங்கள் மும்முரமாக நடத்தி வருகிறது.

Vi 5G சோதனை
அதன்படி வோடபோன் ஐடியா (Vi) பெங்களூரில் உள்ள MG சாலை மெட்ரோ நிலையத்தில் 5G சோதனை நடத்தி இருக்கிறது.
இதுகுறித்த டெலிகாம் தகவலின்படி, விஐ நடத்திய 5ஜி சோதனையில் 1.2Gbps பதிவிறக்கம் வேகம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மட்டுமின்றி புது டெல்லி சர்வதேச விமான நிலையம், குஜராத்தில் உள்ள காண்ட்லா துறைமுகம் மற்றும் போபால் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிறுவனம் சோதனைகளை நடத்தியது.

1.2ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகம்
Vi 5G சோதனைகளை நடத்துவதற்கான ஸ்மார்ட் செல்கள் மற்றும் ஏரியல் ஃபைபர்களை பொருத்துவதற்கு நிறுவனம் சாலையோர பொருட்களை பயன்படுத்தி இருக்கிறது.
அதாவது டிராஃபிக் லைட்ஸ், பேருந்து நிலையம், மின் கம்பங்கள் உள்ளிட்டவைகளை விஐ பயன்படுத்தி இருக்கிறது.
விஐ நடத்திய 5ஜி சோதனையில் ஸ்மார்ட்போன் மூலம் 1.2ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக நடத்திய சோதனையில் இதைவிட வேகம்
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 2021 ஆம் ஆண்டில் விஐ புனேவில் நடத்திய 5ஜி சோதனையில் உச்ச வேகத்தை பதிவு செய்தது. அதாவது விஐ நடத்திய இந்த 5ஜி சோதனையில் 3.7Gbps வேகம் பதிவு செய்தது.
அதேபோல் குஜராத்தின் காந்திநகரில் நடத்தப்பட்ட சோதனையில் 1.5Gbps பதிவிறக்க வேகத்தை நிறுவனம் பதிவு செய்தது.
நோக்கியா E-band MW நெட்வொர்க்கை 5G சோதனைக்கு பயன்படுத்தியதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுவீச்சில் நடக்கும் 5ஜி சோதனை
இந்தியாவில் 5ஜி சோதனை முழுவீச்சில் மும்முரமாக நடந்து வருகிறது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ, ஏர்டெல், விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல இடங்களில் 5ஜி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜியோ மற்றும் விஐ ஒரே இடத்தில் 5ஜி சோதனையை நடத்தி இருக்கிறது.

ஒரே இடத்தில் நடந்த 5ஜி சோதனை
பெங்களூரு MG சாலை மெட்ரோ நிலையத்தில் 5G சோதனையை விஐ நடத்தியது என்ற தகவலை பார்த்தோம்.
அதே நேரத்தில் பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஜியோவும் 5ஜி சோதனையை நடத்தியது.
அப்படி என்றால் ஜியோ எவ்வளவு வேகம் பதிவு செய்திருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் கண்டிப்பாக வரும்.

பைலட் திட்டத்தின் கீழ் 5ஜி சோதனை
இதுகுறித்த BMRCL இன் ட்வீட் படி, பெங்களூரு மெட்ரோ கார்ப்பரேஷன் ஜியோவுடன் இணைந்து ஒரு பைலட் திட்டத்தின் கீழ் 5ஜி நெட்வொர்க்கை சோதனை செய்கிறது.
ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஆனது தற்போது பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தின் 200 மீட்டர் சுற்றளவில் கிடைக்கிறது.
அதேபோல் எம்ஜி ரோடு மெட்ரோ நிலையத்தில் வைத்துள்ள ஜியோ 5ஜி போர்டையும் BMRCL ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகம்
அதிகாரப்பூர்வ ட்வீட்டின் படி, ஜியோ 5ஜி இன் உச்ச பதிவிறக்க வேகம் 1.45Gbps ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 65Mbps பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது.
1.45Gbps என்றால் எவ்வளவு வேகம் என்று தெரியுமா?. பெங்களூருவில் உள்ள ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகமானது 4ஜி நெட்வொர்க்கை விட குறைந்தது 10 மடங்கு அதிகம் ஆகும்.

4ஜி வேகத்தை விட பல மடங்கு அதிகம்
இருப்பினும் பதிவிறக்க வேகத்தை ஒப்பிடுகையில் பதிவேற்ற வேகம் ஆனது சற்று குறைந்ததாகவே இருக்கிறது. தற்போதைய 4ஜி நெட்வொர்க் உடன் ஒப்பிடும் போது 5ஜி நெட்வொர்க்கின் பதிவேற்ற வேகம் மிக அதிகம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
இது சோதனை கட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சோதனை கட்டமே இத்தனை வேகமாக இருந்தால் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது இணைய வேகம் அதீத அளவில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் வேகத்துக்கு கூடுதல் தொகை
அடடா அதிவேகத்தில் 5ஜி சேவையை பயன்படுத்தப் போகிறோம் என்ற ஆரவம் கண்டிப்பாக வந்திருக்கும்.
இதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் கூடுதல் பணம் செலவழிக்கவும் தயாராக இருக்க வேண்டும். அதாவது 4ஜி நெட்வொர்க் விலையை விட குறைந்தது 10% அதிகமாக 5ஜி சேவைக்கு செலவழிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் மாதாந்திர திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் தற்போது செலவு செய்யும் பணத்தை விட கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டியது இருக்கும் என கணிக்கப்படுகிறது.

5ஜி சேவையில் ஆதிக்கம் யாருக்கு
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனத்தை பொறுத்தவரை, ஜியோ அதிக வாடிக்கையாளர்களுடன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
வரவிருக்கும் 5ஜி சேவையிலும் ஜியோ இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேசமயத்தில் விடாமுயற்சியை தளரவிடாத ஏர்டெல் மற்றும் விஐ 5ஜி சேவையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சோதனை கட்டங்கள் மட்டுமே தற்போது வரை நடந்து வருவதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 5ஜி சேவையில் ஆதிக்கம் யாருக்கு என்று.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470