Home
News

வேகம் எடுத்த விஐ 5ஜி.. மும்பை, பாட்னா, சண்டிகர் மட்டுமில்ல.. இனிமே இங்கயும் கிடைக்கும்.. எந்த பகுதி?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு அடுத்தப்படியான மூன்றாவது இடத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், அடுத்தடுத்து புதிய நகரங்களில் 5ஜி சேவையை (5G Services) தொடங்கி வருகிறது. ஏற்கனவே, மும்பை, பாட்னா, சண்டிகரில் 5ஜி சேவையை தொடங்கியது. இப்போது, நாட்டின் முக்கிய நகரில் 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. அது எந்த நகரம்? வோடபோன் ஐடியா 5ஜி திட்டங்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் டேட்டா சலுகைகளை அதிகம் கொடுக்கும் டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் அன்லிமிடெட் நைட் டேட்டா போன்ற சலுகைகளை கஸ்டமர்களுக்கு கொடுத்துவருகிறது. இப்போது, அந்த சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் சேர்த்துள்ளது.

வேகம் எடுத்த விஐ 5ஜி.. மும்பை, பாட்னா, சண்டிகர் மட்டுமில்ல.. எங்கே?

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஆண்டு கணக்கில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையை வழங்கி வருகிறது. சொல்லப்போனால், முக்கால்வாசி சர்க்கிள்களில் இப்போது 5ஜி சேவையை அந்த நிறுவனங்கள் கொடுக்கின்றன. வோடபோன் ஐடியா இப்போதுதான் நிதி பிரச்சனைகளை படிப்படியாக முடித்து கொண்டு 5ஜி சேவையை தொடங்கி வருகிறது.

கடந்த ஆண்டே எங்கெல்லாம், அன்லிமிடெட் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்பதை உறுதி செய்தது. இப்போது, அந்த நகரங்களில் படிப்படியாக தொடங்கிவருகிறது. அதன்படி முதலில் மும்பை நகரில் அன்லிமிடெட் 5ஜி சேவைகள் முதலில் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பாட்னா, சண்டிகர் பகுதிகளிலும் வோடபோன் ஐடியா 5ஜி சேவையை தொடங்கியது.

இப்போது, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தொடங்கி இருக்கிறது. டெல்லி என்சிஆர் (Delhi NCR) பகுதிகளில் இருக்கும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் இப்போது அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம். உண்மையில், ஏப்ரல் மாத இறுதிக்குள் டெல்லி, பெங்களூரூ நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

ஆனால், இப்போது மே மாதத்தில் இடையில் டெல்லியில் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஓரிரு வாரங்களில் பெங்களூரு நகரில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்கும் என்பது தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் சென்னையிலும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா 5ஜி திட்டங்கள் எப்படி? இப்போது, ரூ.299 மதிப்பிலான திட்டத்தில் இருந்து வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது. இதுபோக தினசரிக்கு 1 ஜிபி டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்களும் பயன்படுத்த கிடைக்கின்றன.

இந்த மூன்று சலுகைகளும் போக விஐ அன்லிமிடட் 5ஜி (Vi Unlimited 5G) சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இந்த திட்டத்துக்கு வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டா போன்ற கூடுதல் டேட்டா சலுகைகள் கிடைக்காது. இந்த சலுகைகளும் வேண்டுமானால், வோடபோன் ஐடியா ரூ 349 மதிப்பிலான திட்டத்துக்கு செல்ல வேண்டும்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அதே 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் வருகின்றன. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் வருகிறது. 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea 5G Services Launched in Delhi NCR Following in Mumbai Patna Chandigarh Check Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X