அம்பானிக்கு திக் திக்.. Vodafone Idea 5G அறிமுக தேதி அறிவிப்பு.. மொத்தம் 17 நகரங்களில்.. முதலில் எங்கே?
ஜியோவும், ஏர்டெல்லும் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த நாளில் இருந்து இன்று வரையிலாக வோடபோன் ஐடியா சந்திக்கும் சிக்க்கல்களும், இழப்புகளும் கொஞ்ச நஞ்சமில்லை. ஜியோவும் ஏர்டெல்லும் நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை வெளியிட்டு பல மாதங்கள் ஆகியும் கூட வோடாபோன் ஐடியாவானது 5ஜி (Vodafone Idea 5G) அறிமுகம் குறித்து வாய் திறக்காமல் இருந்தது.
பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவைகளை அறிமுகம் செய்யாத பிஎஸ்என்எல் கூட அவ்வப்போது 5ஜி அறிமுகம் குறித்து பேசுகிறது. ஆனால் வோடபோன் ஐடியாவோ மிகவும் மௌனமாக இருந்து "எல்லா அடிகளையும்" வாங்கி கொண்டே வந்தது. தற்போது இந்நிறுவனம் தான் வாங்கிய எல்லா அடிகளையும் திருப்பி கொடுப்பதற்கான நாளை அறிவித்துள்ளது. அதாவது - வோடாபோன் ஐடியா 5ஜி எப்போது அறிமுகமாகும்? முதலில் எந்தெந்த நகரங்களில் அறிமுகமாகும் என்கிற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வோடாபோன் ஐடியா நிறுவனம், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. விஐ-யின் 5ஜி சேவைகள் ஆனது முதலில் டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகமாகும். பின்னர் இவ்விரு நகரங்களையும் சேர்த்து இந்தியாவின் 17 முன்னுரிமைமிக்க டெலிகாம் வட்டங்களில் வணிக ரீதியான 5ஜி சேவைகள் அறிமுகமாகும்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டரான வோடபோன் ஐடியா, தற்போதைய 77% உடன் ஒப்பிடும்போது, ஜூன் 2025 க்குள் 4ஜி கவரேஜுடன் இந்திய மக்கள்தொகையில் குறைந்தது 90% ஐ அடைய வேண்டும் என்கிற இலக்கை கொண்டுள்ளது. இந்த மறுமலர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, தனது 4ஜி கவரேஜை மேம்படுத்த புதிய நிதிகளையும் திரட்டியுள்ளது மற்றும் மேலும் சந்தாதாரர் இழப்பைத் தடுக்க 5ஜி சேவையையும் வெளியிடுகிறது.
இதுகுறித்து ஜக்பீர் சிங் (வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் சிடிஓ), 5ஜி விஷயத்தில் நாங்கள் கொஞ்சம் மெதுவாக தான் செல்கிறோம், ஆனால் முதலில் டெல்லி மற்றும் மும்பையில் தான் 5ஜி-ஐ அறிமுகம் செய்வோம். அதனை தொடர்ந்து 17 மாநிலங்களில் உள்ள அனைத்து பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் 5ஜி-ஐ அறிமுகம் செய்வோம் என்று கூறியுள்ளார்.
கூடுதலாக, இங்கிலாந்தின் வோடபோன் குழுமம் மற்றும் இந்தியாவின் ஆதித்ய பிர்லா குழுமத்தின் கூட்டு முயற்சியான தொலைத்தொடர்பு நிறுவனமானது, 4ஜி மற்றும் 5ஜி கவரேஜுக்கான 17 உரிமம் பெற்ற பகுதிகள் அல்லது தொலைத்தொடர்பு வட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் ஜக்பீர் சிங் குறிப்பிட்டார்.
சமீபத்தில், வோடபோன் ஐடியாவானது நோக்கியா, எரிக்சன் மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் மூன்று ஆண்டுகளில் நெட்வொர்க் உபகரணங்களை வழங்குவதற்காக $3.6 பில்லியன் மதிப்புள்ள பல்வேறு ஒப்பந்தங்களை முடித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் - ஏறக்குறைய $6.6 பில்லியன் மதிப்பிலான மூன்று வருட கேபெக்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் படியை குறிக்கிறது
தற்போதைய 1.03 பில்லியன் இருந்து 1.2 பில்லியனாக 4ஜி மக்கள்தொகை கவரேஜை விரிவுபடுத்தும் நோக்கத்தை கொண்டுள்ள கேபெக்ஸ் திட்டமானது, முக்கிய சந்தைகளில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் டேட்டா வளர்ச்சிக்கு ஏற்ப நெட்வொர்க் திறனை விரிவாக்குவது போன்ற பணிகளையும் செய்யும்.
இந்த விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, வோடபோன் ஐடியா ஆனது தனது நெட்வொர்க் தரத்தை மேம்படுத்துவதற்கும், அதிக திறனை வழங்குவதற்கும், வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய அதன் ஸ்பெக்ட்ரம் ஹோல்டிங்ஸை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் 4ஜியை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தும்.
தற்போது இந்நிறுவனம் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2.1 ஜிகாஹெர்ட்ஸ், 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை கொண்டுள்ளது. ஜக்பீர் சிங்கின் கூற்றுப்படி, 900 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் எங்களிடம் 55,000 தளங்கள் மட்டுமே இருந்தன. இப்போது நாங்கள் 150,000 தளங்களுக்கு செல்கிறோம். அவற்றில் 50,000 தளங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது. அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் மேலும் 50,000 தளங்கள் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








