Home
News

Airtel, Jio கதறல்! ரூ.299-க்கு அன்லிமிடெட் 5ஜி பிளானை இறக்கிய Vodafone.. 5ஜி போன், Vi சிம் போதும்! எந்த ஊரில்?

விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, பெங்களூருவில் அதன் 5ஜி சேவைகளை (5G Services) அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்கு பிறகு இன்னொரு முக்கிய நகரத்திலும் தனது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

கூடவே அந்த நகரத்தில் உள்ள 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்ட வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு (5G Smartphone With VI SIM Users) அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரும் (Vi Unlimited 5G Data Offer) அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன நகரம்? விஐ அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் எந்தெந்த திட்டங்களில் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

ரூ.299 க்கு அன்லிமிடெட் 5ஜி பிளானை இறக்கிய Vodafone Idea.. எந்த ஊரில்?

எந்த நகரம்? வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தொடர்ந்து மைசூரில் (Mysore) தனது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மைசூரில் அதன் 5ஜி நெட்வொர்க்கை தொடங்க வோடாபோன் ஐடியா நிறுவனமானது சாம்சங் (Samsung) உடன் இணைந்து பணியாற்றியது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு தளங்களில் கூடுதல் ஸ்பெக்ட்ரத்தை (Additional spectrum) பயன்படுத்துவதன் மூலம் நெட்வொர்க் கவரேஜை மேம்படுத்துவதிலும் பணியாற்றி வருவதாகவும் விஐ தெரிவித்துள்ளது.

ஆக இப்போது விஐ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஆனது பெங்களூரு, சண்டிகர், டெல்லி-என்சிஆர், மும்பை மற்றும் பாட்னா ஆகிய 5 நகரங்களையும் சேர்த்து மொத்தம் 6 நகரங்களில் தனது 5ஜி சேவைகளை வழங்குகிறது. இதற்காக குறிப்பிட்ட வட்டங்களில் உள்ள 5ஜி ஸ்பெக்ட்ரத்தை (5G Spectrum) விஐ வாங்கியுள்ளது; இதனால் அதன் சந்தாதாரர்களுக்கு மேம்பட்ட கனெக்டிவிட்டியை (Improved Connectivity) வழங்க முடியும்.

விஐ அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் விவரங்கள்: மைசூரில் உள்ள வோடாபோன் ஐடியா பயனர்கள் ரூ.299 முதல் தொடங்கும் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் விஐ அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரை பெறுவார்கள். பெயர் குறிப்பிடுவது போலவே இதன் கீழ் வரம்பற்ற 5ஜி டேட்டாவை அணுக முடியும். இருப்பினும், இது அறிமுக சலுகையின் (Introductory offer) ஒரு பகுதி என்பதையும் விஐ தெளிவுபடுத்தியுள்ளது.

விஐ 5ஜி அடுத்த கட்டம் என்ன? ஆரம்ப வெளியீட்டின் ஒரு பகுதியாக, மற்ற நகரங்களிலும், 17 வட்டங்களிலும் அதன் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆரம்ப வெளியீட்டின் ஒரு பகுதியாக 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் விஐ கூறுகிறது. கர்நாடகாவில் அதன் தற்போதைய 4ஜி நெட்வொர்க் ஆனது மார்ச் 2024 மற்றும் மே 2025 க்கு இடையில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் மூலம் மேம்படுத்தப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விஐ நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க்கை அணுகக்கூடிய பிற நகரங்களில் - மதுரை (Madurai), அகமதாபாத், ஆக்ரா, ஔரங்காபாத், கோழிக்கோடு, கொச்சின், டேராடூன், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மலப்புரம், மீரட், நாக்பூர், நாசிக், புனே, ராஜ்கோட், சோனிபட், சூரத், சிலிகுரி, திருவனந்தபுரம், வதோதரா மற்றும் வைசாக் ஆகியவைகள் உள்ளன.

5ஜி அறிமுகம் மற்றும் 5ஜி சேவையில் விஐ நிறுவனமானது ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய 2 டெலிகாம் ஆப்ரேட்டர்களையும் பின்பற்றினாலும் கூட, இந்நிறுவனம் அதன் மிகப்பெரிய போட்டியாளர்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்பதே உண்மை. பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆகிய நிறுவனங்கள் முதன்முதலில் தங்கள் 5ஜி சேவைகளை கடந்த அக்டோபர் 2022 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொடங்கின, பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல நகரங்களுக்கு விரிவடைந்தன. இதை செய்ய வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு அடுத்த பல மாதங்கள் (அல்லது ஆண்டுகள்) ஆகலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea 5G Introduced in Mysuru 5G Smartphone Owners Get Unlimited 5G Data Offer Plans Starts Rs 299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X