Home
News

Vodafone-க்கு கும்பிடு.. 17 சிட்டிக்கு வச்சாச்சு.. தமிழ்நாட்டில் 5G அறிமுகம் முதல்ல இங்கதான்.. இனி எங்கெங்க?

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் அறக்க பறக்கும் விதமாக எந்தெந்த பகுதிகளில் வோடபோன் ஐடியா 5ஜி (Vodafone Idea 5G) சேவைகள் கிடைக்கும் என்பதை அந்த நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டின் சென்னை உள்பட 17 நகரங்களில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கின்றன. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவைகளை தொடங்கி வருட கணக்கில் ஆகிவிட்டாலும், வோடபோன் ஐடியா நிறுவனம், அந்த போட்டியில் இணைந்து கஸ்டமர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. எந்தெந்த பகுதிகள்?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு பிறகு 5ஜி சேவையை வழங்குவதற்காக பணிகளில் மும்முரமாக இறங்கின. ஆனால், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் வோடபோன் ஐடியா நிறுவனத்தால், 5ஜி சேவை உடனடியாக வழங்க முடியவில்லை. இதனால், கஸ்டமர்களின் எண்ணிக்கையில் வோடபோன் ஐடியா சரிவை சந்தித்தது. ஆனால், இப்போது 5ஜி ஆட்டத்தில் இறங்கிவிட்டது.

Vodafone-க்கு கும்பிடு.. 17 சிட்டிக்கு வச்சாச்சு.. எங்கு 5G அறிமுகம்!

வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்கும் நகரங்கள் மற்றும் அவற்றின் பகுதிகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த உரிமம் பெற்ற சேவை பகுதிகளில் (Licensed Service Areas) 17 சிட்டிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் சென்னை சிட்டி இதில் இருக்கிறது. இந்த சென்னையில் பெருங்குடி, நெசப்பாக்கம் பகுதிகளில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கிறது.

அதேபோல கேரள மாநிலத்தின் திருக்காக்கரை சிட்டியில் இருக்கும் கக்கநாடு பகுதிகளில் சேவை கிடைக்க இருக்கிறது. ஆந்திர சர்க்கிளில் ஹைதராபாத் சிட்டியில் இருக்கும் ஐடா உபால், ரங்கா ரெட்டி பகுதிகளில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ சிட்டியின் டைரி சர்க்கிள் பகுதிகள் 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மற்றும் லக்னோ சிட்டிகளில் ஜே.பி. ஹோட்டல், ஃபதேஹாபாத் சாலை, விபுதி கன்த் மற்றும் கோமதி நகர் பகுதிகளில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் சிட்டியில் இருக்கும் கேலக்ஸி சினிமா, மான்சரோவர் தொழில்துறை பகுதி மற்றும் ஆர்ஐஐசிகோ (RIICO) பகுதிகளில் 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது.

ஹரியானா மாநிலம் கர்னல் சிட்டியில் இருக்கும் எச்எஸ்ஐஐசிடி (HSIIDC), தொழில்துறை பகுதி மற்றும் செக்டார்-3 பகுதிகள் வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சிட்டியில் இருக்கும் செக்டர் 4, சால்ட் லேக் பகுதிகளிலும் வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்கும். மேலும் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் சிட்டியின் எலக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ், பர்தேஷிபுராவில் கிடைக்க இருக்கிறது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் சிட்டியில் இருக்கும் திவ்யா பாஸ்கர், கார்ப்பரேட் சாலை, மகர்பா, பிரஹலாத்நகர் ஆகிய பகுதிகளிலும் வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருக்கும் சிட்டி பிளாசா செவோக் சாலை பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. பீகார் மாநிலத்தின் பாட்னாவில் அனிஷாபாத் கோலம்பர் பகுதிகளிலும் கிடைக்கிறது.

மும்பை சிட்டியில் இருக்கும் வொர்லி மற்றும் மரோல் பகுதிகளிலும் கிடைக்க இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரையில் ஜலந்தர்யில் இருக்கும் கோட் கலன் பகுதிகளில் 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மற்றும் சிவாஜி நகரிலும் வோடபோன் 5ஜி சேவைகள் கிடைக்கும். இறுதியாக டெல்லியின் ஓக்லா தொழில்துறை, பேஸ் 2 பகுதிகள் கிடைக்க இருக்கிறது.

மேலும், இந்தியா கேட் மற்றும பிரகதி மைதானம் பகுதிகளிலும் கிடைக்க இருக்கிறது. ஆகவே, வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவைக்கு கஸ்டமர்களை மாற்ற இருக்கிறது. ஆரம்பத்தில் 4ஜி திட்டங்களிலேயே 5ஜி சேவையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு திட்டங்கள் வெளியாகலாம். ஏனென்றால், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதைத்தான் செய்தன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea 5G Available Areas Across India Check 17 Licensed Service Areas Including Tamil Nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X