வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு 'இந்த' டேட்டா வவுச்சர்கள் தான் பெஸ்ட்.. இனி FUP வரம்பு பற்றி கவலை இல்லை

|

இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டரான வோடபோன் ஐடியா, பயனர்களுக்கு பல ப்ரீபெய்ட் 4 ஜி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு டேட்டா என்பது மிகவும் முக்கியமானது, சிலர் அவசர தேவைக்கு நாள் இறுதியில் டேட்டா பற்றாக்குறை காரணமாக சில சிக்கலைச் சந்திக்க நேரிடும். இந்த சிக்கலைத் தவிர்க்கவே நிறுவனம் 4 ஜி வவுச்சர்கள் அறிமுகம் செய்துள்ளது. உங்கள் FUP வரம்பு நிறைவடைந்த பின்னர் டேட்டா தேவைக்கு இந்த வவுச்சர்களை பயன்படுத்துங்கள்.

அதிக தரவு தேவைப்படும் பயனர்களுக்கு இதான் பெஸ்ட்

அதிக தரவு தேவைப்படும் பயனர்களுக்கு இதான் பெஸ்ட்

அதிக தரவு தேவைப்படும் பயனர்கள் மற்றும் வசதியாக வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புவோருக்கும் இந்த டேட்டா வவுச்சர்கள் பெரிதும் உதவும் என்று Vi நிறுவனம் கூறுகிறது. இப்போது நீங்கள் Vi டெல்கோவில் இருந்து வாங்கக்கூடிய மொத்தம் 4 ஜி டேட்டா வவுச்சர்கள் எண்ணிக்கை 6 ஆக உள்ளது. அதாவது, உங்கள் தேவைக்கேற்ப டேட்டா வழங்கும் 6 அற்புதமான திட்டங்களை Vi கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் ரூ.16 முதல் துவங்கு ரூ. 48, ரூ. 98, ரூ. 251, ரூ. 351 மற்றும் ரூ. 601 ஆகிய விலைகளில் கிடைக்கிறது.

மொத்தம் 6 4G தரவு வவுச்சர் திட்டங்களை வழங்கும் Vi

மொத்தம் 6 4G தரவு வவுச்சர் திட்டங்களை வழங்கும் Vi

வோடபோன் ஐடியா 4 ஜி டேட்டா வவுச்சர்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி, வோடபோன் ஐடியா (Vii) இலிருந்து நீங்கள் வாங்கக்கூடிய மொத்தம் 6 4G தரவு வவுச்சர் திட்டங்களை வழங்குகிறது. ஒவ்வொரு திட்டமும் அதன் விலைகேற்ப சிறந்த டேட்டா அளவை வழங்குகிறது. விபரமாகப் பார்க்கும் போது ரூ. 16 அடிப்படை வவுச்சர் 1 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது 24 மணிநேரம் அல்லது 1 நாளுக்குள் காலாவதியாகும் செல்லுபடி நாட்களுடன் வருகிறது.

அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வேண்டுமா? அப்போ இந்த Airtel திட்டத்தை பாருங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வேண்டுமா? அப்போ இந்த Airtel திட்டத்தை பாருங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..

ரூ. 48 மற்றும் ரூ .98 வவுச்சருடன் என்ன நன்மைகள் கிடைக்கிறது?

ரூ. 48 மற்றும் ரூ .98 வவுச்சருடன் என்ன நன்மைகள் கிடைக்கிறது?

பிறகு நீங்கள் ரூ. 48 வவுச்சரை தேர்வு செய்யும் போது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் 3 ஜிபி டேட்டா வாங்குவதற்குக் கிடைக்கும். டெல்கோவிலிருந்து 28 நாட்கள் வரம்பற்ற திட்டத்தில் பயனடைய மக்களுக்கு இது ஒரு நல்ல வவுச்சர். அதேபோல், ரூ .98 வவுச்சருடன், பயனர்களுக்கு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 12 ஜிபி டேட்டாவைப் பெறுகின்றனர். முன்னதாக, டெல்கோ அதே தொகைக்கு 6 ஜிபி தரவை மட்டுமே வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய மாற்றம் 'இது'

பயனர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய மாற்றம் 'இது'

ஆனால் இப்போது நிறுவனம் இந்த வவுச்சரை 12 ஜிபி டேட்டா உடன் வழங்குகிறது. இது உண்மையில் பயனர்களுக்கு லாபம் தரக்கூடிய ஒரு பெரிய மாற்றம் என்பதில் சந்தேகமில்லை. 'வீட்டிலிருந்து வேலை செய்வதற்காக' பயனர்களுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட இரண்டு தரவு வவுச்சர்களை நீங்கள் பெற வேண்டுமென்றால், நீங்கள் ரூ. 251 4ஜி திட்டம் மற்றும் ரூ. 351 திட்டத்தை தேர்வு செய்யலாம். Vi வழங்கும் ரூ. 251 திட்டம் 50 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

ஜியோவையே மிஞ்சும் Vi இன் ரூ. 249 திட்டம்.. அதிக டேட்டாவுக்கு 'இந்த' அபார திட்டம் தான் ரைட் சாய்ஸ்..ஜியோவையே மிஞ்சும் Vi இன் ரூ. 249 திட்டம்.. அதிக டேட்டாவுக்கு 'இந்த' அபார திட்டம் தான் ரைட் சாய்ஸ்..

OTT நன்மையுடன் கிடைக்கும் டேட்டா வவுச்சர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

OTT நன்மையுடன் கிடைக்கும் டேட்டா வவுச்சர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் அதிக தரவு மற்றும் அதிக செல்லுபடியை தேடுகிறீர்களானால், நீங்கள் வெறும் ரூ. 100 அதிகமாகச் செலுத்தி Vi வழங்கும் ரூ. 351 வவுச்சர் திட்டத்தை தேர்வு செல்லலாம். இது ரூ. 351 வவுச்சரில், பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது. மேலும் இந்தத் திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. Vodafone Idea வின் ஆறாவது மற்றும் மிகவும் விலையுயர்ந்த 4G டேட்டா வவுச்சர் என்றால் அது ரூ. 601 திட்டம் தான். இந்த வவுச்சரின் சிறப்பு என்னவென்றால், இது ஓவர்-தி-டாப் (OTT) நன்மையுடன் வருகிறது.

இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வேண்டுமா? அப்போ இந்த திட்டத்தை பாருங்க

இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வேண்டுமா? அப்போ இந்த திட்டத்தை பாருங்க

டேட்டா வவவுச்சர் உடன் OTT நன்மையையும் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம், இந்த திட்டம் பயனர்களுக்கு 75 ஜிபி டேட்டா மற்றும் ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் டேட்டா செல்லுபடி காலம் 56 நாட்கள் ஆகும். உங்கள் FUP வரம்பு முடிந்த பின்னரும் டேட்டா தேவையை நீங்கள் எதிர்பார்க்கும் பயனர் என்றால், மேலே கூறிய திட்டங்கள் உங்கள் தேவைக்கான தரவை அதிகரிக்க உதவும். இவை அனைத்தும் வோடபோன் ஐடியாவில் இருந்து வாங்கக்கூடிய 4 ஜி தரவு வவுச்சர் பட்டியலின் கீழ் கிடைக்கிறது.

2 ஜிபி திட்டம் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்

2 ஜிபி திட்டம் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்

வோடபோன் ஐடியா ரூ. 200 க்கு கீழ் மற்றும் பல்வேறு செல்லுபடியாகும் கூடுதல் தரவு வவுச்சர்களை வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கண்டிப்பாக 2 ஜிபி டேட்டா வவுச்சருக்கும் இடம் உள்ளது. டெல்கோவின் 1 ஜிபி டேட்டா வவுச்சர் ரூ. 16 க்கு மிகவும் விலை உயர்ந்தது. எனவே வோடபோன் ஐடியா (Vi) இலிருந்து ரூ. 24 அல்லது ரூ. 25 என்ற விலையில் 2 ஜிபி டேட்டா வவுச்சர் கொடுத்திருந்தால் மிகச் சிறந்த ஒப்பந்தமாக இருக்கும். இதையும் நிறுவனம் கவனத்தில் கொண்டு வரும் காலத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Idea 4G Data Vouchers Details For Work From Home Customers In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X