ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. VI இன் இந்த 4 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டன. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் இதுவரை 5ஜி சேவையை அறிமுகம் செய்யவில்லை.
ஆனால் வரும் வாரங்களில் வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி தரும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன. இதுதவிர கூடுதலாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்.
வோடபோன் ஐடியா ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 850ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக், பிங் ஆல் நைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.
வோடபோன் ஐடியா ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன. இதுதவிர கூடுதலாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம்.
வோடபோன் ஐடியா ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 24ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 3600 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக் உள்ளிட்ட பல அத்தலான நன்மைகள் இதில் உள்ளன. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு கம்மி விலை திட்டங்களைப் பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ.17 திட்டத்தின் நன்மைகள்: இது வோடாபோன் ஐடியாவின் வவுச்சர் (Voucher) பட்டியல்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு பட்ஜெட் விலை திட்டமாகும். இது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குகிறது.
இருப்பினும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 1 நாள் மட்டுமே ஆகும். மேலும் அன்லிமிடெட் டேட்டாவை தவிர்த்து ரூ.17 ரீசார்ஜ்ஜின் கீழ் வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது. அதாவது இதன் கீழ் அவுட்கோயிங் கால்கள் (Outgoing Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற எந்த நன்மையும் கிடைக்காது. இது முழுக்க-முழுக்க வரம்பற்ற டேட்டா தேவையைக் கொண்டவர்களுக்கான திட்டமாகும்.
வோடபோன் ஐடியா ரூ.57 திட்டத்தின் நன்மைகள்: இதுவும் ஒரு ப்ரீபெய்ட் வவுச்சர் (Prepaid Voucher) ஆகும். மேலும் ரூ.17 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதன் வேலிடிட்டி 7 நாட்கள் அல்லது 1 வாரம் ஆகும். அதாவது இந்த பேக் மொத்தம் 168 மணி நேரம் செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications