Home
News

Vodafone Idea-க்கு 1 வருடம் பட்டாசுதான்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா.. ஹாட்ஸ்டார் சந்தா.. ரீசார்ஜ் ரெடி!

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் எல்லாமே ஒரே திட்டத்தில் வேண்டும், அதுவும் 365 நாட்கள் வேலிடிட்டியில் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) ஒரு வருடாந்திர திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 12 மணி நேரத்துக்கு அன்லிமிடெட் டேட்டாவும் கிடைக்கிறது. மேலும், பல்வேறு டேட்டா சலுகைகளை கொடுக்கிறது. இந்த வோடபோன் ஐடியா ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தின் (One Year Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியாவில் ஒரு வருட வேலிடிட்டியில் ரூ.3,499, ரூ.3,699, ரூ.3,599 மற்றும் ரூ.3,799 விலைக்கு திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களில் வோடபோன் ஐடியா ரூ.3,699 திட்டத்தில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சந்தா கிடைக்கிறது. இதுபோக புதிதாக வோடபோன் ஐடியாவில் அப்கிரேட் செய்யப்பட்ட அன்லிமிடெட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது.

Vodafone Idea-க்கு 1 வருடம் பட்டாசுதான்.. வாய்ஸ் கால்கள்.. 2GB டேட்டா!

வோடபோன் ஐடியா ரூ.3699 திட்டம் (Vodafone Idea Rs.3699 Plan): இந்த வருடாந்திர திட்டத்தில் டேட்டா சலுகைகளே கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படி இருக்கிறது. அதாவது, இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும், இந்த டேட்டா முடிந்துபோன பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. இதுவே 365 நாட்களுக்கு போதுமானதாகும்.

ஆனால், இந்த டேட்டா சலுகைகளோடு அன்லிமிடெட் ப்ரீ டேட்டா சலுகையும் இருக்கிறது. அதாவது, முன்பு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் கிடைத்த அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகையானது, இப்போது 6 மணி நேரம் கூடுதலாக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மதியம் 12 மணி வரையில் நீங்கள் ப்ரீ டேட்டாவை பயன்படுத்தலாம்.

இதன் மூலம் 2 ஜிபி தினசரி டேட்டா போக 12 மணி நேரத்துக்கு ப்ரீ டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், எப்போதும்போல வோடபோன் ஐடியாவில் கிடைக்கும் இதர டேட்டா சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. ஆகவே, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையும், டேட்டா டிலைட்ஸ் சலுகையும் இந்த வருடாந்திர திட்டத்துக்கு கிடைக்கிறது.

இந்த வோடபோன் ஐடியா ரூ.3699 திட்டத்தில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் 1 வருடத்துக்கு பயன்படுத்தலாம். ஆகவே, டேட்டாவுக்கு டேட்டாவும், ஓடிடிக்கு ஓடிடியும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடிகிறது. இப்போது, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு வருவோம்.

இந்த திட்டத்தில் ட்ரூலி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Truly Unlimited Voice Calls) சலுகை இருக்கிறது. ஆகவே, நாள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்களை (Unlimited Local Call) செய்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் எஸ்டிடி கால்கள் (Unlimited STD Calls) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் கிடைக்கிறது.

தினசரிக்கு கிடைக்கும் டேட்டா சலுகையை போலவே 100 எஸ்எம்எஸ்களும் தினசரிக்கு செய்து கொள்ள கிடைக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்தில் டேட்டாவுக்கு துளியும் குறை இருக்காது. இதேபோல ஒரு வருட திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி சந்தாவை பெற்று கொள்ள விரும்பினால், வோடபோன் ஐடியா ரூ.3,799 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஆகவே, இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா, ட்ரூலி அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் முதல் முந்தைய திட்டத்தில் பார்த்த 12 மணி நேர ப்ரீ டேட்டா சலுகைகள் வரையில் கிடைக்கிறது. ஆனால், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுக்கு பதிலாக அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தா கொடுக்கப்படும். இதற்கும் 365 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea 365 Days Plan With 2GB Data Unlimited Voice Calls One Year Disney Plus Hotstar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X