விடிய-விடிய இலவச டேட்டா.. Jio-வுக்கே டஃப் கொடுத்த 3 பெஸ்ட் பிளான்.. 299 விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா..
இந்தியாவை பொறுத்த வரை மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ தான் திகழ்வதாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில், மலிவு விலையில் அதிக நன்மையை வாரி-வழங்கும் நிறுவனமாக மற்றொரு டெலிகாம் நிறுவனம் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அது தான் வோடபோன் ஐடியா அல்லது விஐ (Vi) நிறுவனமாகும். என்னதான் ஜியோ அதன் பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டாவை வழங்கினாலும், வோடபோன் ஐடியா போல அம்பானியால் கூட இலவச டேட்டாவை வழங்க முடியாது என்கின்றனர் Vi இன் தீவிரமான பயனர்கள். வோடபோன் ஐடியா (Vi), இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக செயல்பட்டுவருகிறது.

வோடபோன் ஐடியா 3 சிறந்த திட்டங்களை மலிவு விலையில் தினசரி 1.5GB டேட்டா நன்மையுடன் வழங்குகிறது. இவை 3 ப்ரீபெய்ட் திட்டங்களாகும். இந்த திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், இவை விஐ ஹீரோ அன்லிமிடெட் ((Vi Hero unlimited) நன்மைகளுடன் வருகின்றன. தெரியாதவர்களுக்கு, Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மூன்று விஷயங்களின் கலவையாகும்.
இது வீகென்ட் டேட்டா ரோல்ஓவர் (Weekend data rollover), டேட்டா டிலைட்ஸ் (Data delights) மற்றும் பிங்கே ஆல் நைட் (Binge all night) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. இந்த மூன்று நன்மைகளும் தனித்துவமானவை மற்றும் தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மத்தியில் வோடபோன் ஐடியாவால் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் திட்டங்கள் ரூ.299 விலை முதல் துவங்குகின்றன.
வோடபோன் ஐடியா (Vodafone Idea) வழங்கும் 3 பெஸ்ட் பிளான் ரூ.299, ரூ 479 திட்டம் மற்றும் ரூ 719 திட்டம் ஆகிய திட்டங்களை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா ரூ 299 திட்டம்
Vi ரூ.299 திட்டமானது உண்மையிலேயே வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 SMS, 1.5GB தினசரி டேட்டா மற்றும் விஐ மூவீஸ் & டிவி கிளாசிக் (Vi Movies & TV Classic) உடன் வருகிறது. பயனர்கள் Vi Hero அன்லிமிடெட் நன்மைகளையும் பெறுவார்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் மட்டுமே.
வோடபோன் ஐடியா ரூ 479 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.479 திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 56 நாட்களுக்கு வழங்குகிறது. இது Vi Movies & TV Classic மற்றும் Vi Hero அன்லிமிடெட் நன்மைகளுடன் வருகிறது.
வோடபோன் ஐடியா ரூ 719 திட்டம்
VI இன் இந்த ரூ.719 திட்டமானது மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களைப் போலவே உள்ளது, ஒரே வித்தியாசம் செல்லுபடியாகும். Vi வழங்கும் ரூ.719 ஆனது 84 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு விஐ மூவீஸ் & டிவி கிளாசிக் மற்றும் விஐ ஹீரோ நன்மையுடன் வருகிறது.

Vi Hero என்னென்ன நன்மைகளை வழங்குகிறது?
Vi Hero அன்லிமிடெட் நன்மைகளில் வீகென்ட் டேட்டா ரோல்ஓவர் நன்மையை கொண்டுள்ளது. அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை நீங்கள் பயன்படுத்தாத FUP டேட்டாவை, வார இறுதியில் (சனி-ஞாயிறு) பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர், பின்ங்கே ஆள் நைட் (Binge All Night) அம்சம், தினமும் 12 AM முதல் 6 AM வரை வரம்பற்ற அதிவேக டேட்டாவைப் இலவசமாகவும், அன்லிமிடெட் ஆகவும் பயன்படுத்த அனுமதிக்கிறது.
கடைசியாக, உங்களுக்கு டேட்டா டிலைட்ஸ் நன்மையுடன் இத்துடன் கிடைக்கிறது. இதன் கீழ் நீங்கள் நிறுவனத்திடமிருந்து 2 ஜிபி அவசரத் தரவைப் பெறுவீர்கள். இது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒவ்வொரு நாளும் 1ஜிபியாக ரிடீம் செய்யப்படும். இந்த நன்மைகளை வோடபோன் ஐடியா மட்டுமே வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








