ஆடிப்போன அம்பானி.. Vodafone-ன் 3-நாள் தீபாவளி ஆபர்.. 1 வருட ரீசார்ஜ் இலவசம், 50GB எக்ஸ்ட்ரா, ரூ.100 கேஷ்பேக்!
2024 தீபாவளி பண்டிகைக்காக, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ (Jio) நிறுவனமானது மொத்தம் 4 வகையான தீபாவளி ஆபர்களை அறிவித்து, ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் குஷிப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் பிஎஸ்எஸ்எல் (BSNL) நிறுவனங்கள் கூட தத்தம் தீபாவளி ஆபர்களை அறிவித்தன.
ஆனால் விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் மட்டும் எந்த விதமான தீபாவளி சலுகைகளையும் அறிவிக்காமலேயே இருந்தது. ஏற்கனவே நஷ்டம் மற்றும் வடிக்கையாளர் இழப்பால் தள்ளாடுவதால் இந்தாண்டு எந்த தீபாவளி ஆபரும் அறிவிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியாக தீபாவளி பண்டிகை அன்று (அக்.31) வோடபோன் ஐடியா தனது கஸ்டமர்களுக்கான தீபாவளி ஆபர்களை அறிவித்து அதகளம் செய்துள்ளது.

வோடாபோன் நிறுவனம் "ஸ்பின் தி வீல்" மற்றும் "வின் அஷ்யூர்டு ரிவார்ட்ஸ்" என்கிற 2 வகையான தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்கீழ் விஐ ஆப் வழியாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் "ஸ்பின் தி வீல்" ஆபரின் கீழ் சக்கரத்தை சுழற்ற தகுதி பெறுவார்கள்.
இதன்கீழ் விஐ வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி, 2ஜிபி, 5ஜிபி மற்றும் 30ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா, ஆன்லைன் போர்ட்டல்களுக்கான தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் அதிகபட்சமாக ரூ.3,499 வருடாந்திர ரீசார்ஜ் ஆகியவைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். சக்கரத்தை சுழற்றிய பின்னர் கேட்கப்படும் எளிதான கேள்விக்கு பதிலளித்து, இந்த ரிவார்ட்களை பெறலாம். சுவாரசியமாக 48 மணிநேரத்திற்கு ஒருமுறை இந்த ரிவார்ட்களை நீங்கள் வெல்லலாம்.
இது தவிர்த்து ரீசார்ஜ் செய்யும் போது ரூ.100 வரையிலான உடனடி தள்ளுபடி (கேஷ்பேக்) மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் போது 50ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா போன்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நன்மைகளுடன், விஐ ஆப் மூலம் விஐ ஷாப்பில் மின்த்ரா (Myntra), பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon), சோனி லைவ் (Sony LIV) ஆகியவைகளுக்கான பிராண்ட் வவுச்சர்களில் 25% வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும்.
இந்த சலுகைகள் எல்லாம் நவம்பர் 3 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் மற்றும் இவைகள் விஐ ஆப் வழியாக மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ அறிவித்துள்ள 2024 தீபாவளி சலுகைகளை பொறுத்தவரை முதலில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டு இலவச சந்தா அறிவிக்கப்பட்டது. பின்னர் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது ரூ.3350 மதிப்புள்ள இலவச வவுச்சர்கள் / கூப்பன்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட திட்டங்கள் - 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.899 திட்டம் மற்றும் 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும் ரூ.3,599 திட்டம் ஆகிய ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள கூப்பன் / வவுச்சர் நன்மைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து 2 ஜியோபார்த் 4ஜி ஃபீச்சர் போன்கள் மீது ரூ.300 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு அவைகள் வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த மாடல்கள் - ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) ஆகியவைகள் ஆகும். இவ்விரு மாடல்களுமே ரூ.300 விலை குறைப்பை பெற்று ரூ.999 க்கு பதிலாக (ஒரு குறிப்பிட்ட கால சலுகையின் கீழ்) ரூ.600 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக ஜியோவிற்கு சொந்தமான ம்யூசிக்-ஸ்ட்ரீமிங் தளமான ஜியோசாவன் சேவையின் கீழ் 3 மாத காலத்திற்கு ஜியோசாவன் ப்ரோ சந்தாவானது (JioSaavn Pro Individual Subscription) இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல்-ன் தீபாவளி ஆபரை பொறுத்தவரை ரூ.1999 திட்டத்தின் விலை குறைக்கப்பட்டு, தற்போது இது ரூ.100 தள்ளுபடியுடன் ரூ.1899 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த சலுகை நவம்பர் 7 வரை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








