Home
News

இருக்கு ஆனா இல்லை.. Vodafone Idea சிம் வைத்து இருக்கும் 20% பேர் பற்றி வெளியான பகீர் உண்மை!

ஐஐஎப்எல் கேபிடலின் (IIFL Capital) சமீபத்திய அறிக்கை ஒன்று - இந்திய தொலைத்தொடர்பு துறையின் மூன்றாவது பெரிய தனியார் டெலிகாம் நிறுவனம் ஆன வோடபோன் ஐடியா சிம் கார்டு கஸ்டமர்களை (Vodafone Idea SIM Card Users) பற்றிய பகீர் தகவல் ஒன்றை வெளிப்படுத்தி உள்ளது.

அதென்ன தகவல்? ஐஐஎப்எல் கேபிடல் அறிக்கையானது வோடாபோன் ஐடியா நிறுவனமானது 20 சதவீதத்திற்கும் அதிகமான செயலற்ற சந்தாதாரர்களை (Inactive subscribers) தக்க வைத்துக் கொண்டுள்ளதாக கூறுகிறது. ஏனெனில் இந்நிறுவனத்தின் கீழ் உள்ள 197.2 மில்லியன் சந்தாதாரர்களில் 154.7 மில்லியன் மட்டுமே ஆக்டிவ் ஆக உள்ளனராம்.

Vodafone Idea சிம்.. 20% பேர் பற்றி வெளியான பகீர் உண்மை!

டிராய் (TRAI)எ ன்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) வெளியிட்ட அக்டோபர் 2025 தரவுகளின்படி, வோடபோன் ஐடியா நிறுவனமானது 2,083,618 வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது. இது சமீபத்திய மாதங்களில் வி நிறுவனம் சந்தித்த மிக மோசமான சரிவு ஆகும்.

நாடு முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு - ஹீரோ (Hero), சூப்பர் ஹீரோ (Super Hero) மற்றும் நான்ஸ்டாப் ஹீரோ அன்லிமிடெட் டேட்டா பேக்குகளை (NonStop Hero unlimited data packs) வழங்கிய போதிலும் கூட வோடாபோன் ஐடியா நிறுவனத்தால் சந்தாதாரர்களின் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

மொபைல் பிராட்பேண்டில் (4ஜி/5ஜி), ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் முறையே 2.7 மில்லியன் மற்றும் 2 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளன. அதே நேரத்தில் வி நிறுவனமானது 2025 அக்டோபரில் 0.5 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது. ஆக்டிவ் ஆக உள்ள சந்தாதாரர்களின் அடிப்படையில், ஜியோ 3.9 மில்லியன் கூடுதல் சந்தாதாரர்களுடன் முன்னிலை வகித்தது. ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் 2.8 மில்லியன் சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஜூன்-செப்டம்பர் காலாண்டில் வி பதிவு செய்த 197.2 மில்லியன் பயனர்களில், 154.7 மில்லியன் பேர் மட்டுமே ஆக்டிவ் ஆக உள்ளனர் மற்றும் அவர்களால் மட்டுமே வி வருவாய் ஈட்டுகிறது என்றும் ஐஐஎப்எல் கேப்பிடல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வி நிறுவனத்தின் ஏஆர்பியு (ARPU -ஒரு பயனருக்கு சராசரி வருவாய்), வாய்ஸ் நிமிட பயன்பாடு மற்றும் தரவு நுகர்வு ஆகியவைகள் ஜியோ மற்றும் ஏர்டெல்லை விட கணிசமாகக் குறைவாக இருக்கலாம்.

செப்டம்பர் காலாண்டில் வி-யின் அறிவிக்கப்பட்ட ஏஆர்பியு ரூ.167 ஆக இருந்தது, இது ஜியோவின் ரூ.211.4 மற்றும் ஏர்டெல்லின் ரூ.256-ஐ விட மிகவும் குறைவு ஆகும். ஒட்டுமொத்தமாக இந்த அறிக்கை ஆனது வி நிறுவனத்திற்கு "உண்மையான பணம் செலுத்தும் பயனர் தளம்" அதன் அறிவிக்கப்பட்ட தளத்தை விட மிகக் குறைவு என்பதை இது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் ஆனது, புதிய ஸ்மார்ட்போன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு இலவச டேட்டா சலுகைகளை வழங்கும் வி கேரண்டி எக்ஸ்டரா டேட்டா புரோகிராமை (Vi Guarantee extra data program) நிறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியானது. நினைவூட்டும் வண்ணம் வி கேரண்டி திட்டத்தின் கீழ், பயனர்கள் ஒரு வருடத்திற்கு 130ஜிபி அளவிலான உத்தரவாதமான கூடுதல் டேட்டாவை பெற்றனர்.

அதாவது 13 தொடர்ச்சியான சுழற்சிகளுக்கு, ஒவ்வொரு 28 நாட்களுக்கும், 10ஜிபி டேட்டா தானாகவே வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்படியான வி கேரண்டி எக்ஸ்டரா டேட்டா ஆனது வி ஆப் மூலம் பெறக்கூடியதாக இருந்தது. இந்த சலுகை அறிமுகமான தொடக்கத்தில், பயனர்கள் ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் டெய்லி டேட்டா அன்லிமிடெட் திட்டத்தில் இருக்க வேண்டும் என்றும், 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள வி சந்தாதாரர்கள் அல்லது சமீபத்தில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனுக்கு மேம்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்பொது அமைதியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea 20 percent SIM Card Users Are Inactive and Vi Lost Subscribers But Jio leads Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X