Vodafone-க்கு கும்பிடு.. மொத்தமா முடிச்சு விட்டாச்சு.. ஒரே திட்டம்தான்.. டேட்டா, கால்களுக்கு லிமிட் இல்ல!
ஒரு திட்டம்னாலும், புளியங்கொம்பு திட்டம்பா என்று அடித்து சொல்லும் அளவுக்கு வேலிடிட்டி முழுக்க அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 1 வருடத்துக்கான ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் சன்நெக்ஸ்ட் ஓடிடி சந்தாவை வெறும் ரூ 1101 திட்டத்தில் வோடபோன் ஐடியா கொடுக்கிறது.
இதுபோக இன்டர்நேஷனல் ரோமிங், விமான டிக்கெட் புக்கிங் சலுகைகள், விஐ மூவிஸ் மற்றும் டிவி சலுகை மூலம் லைவ் டிவி சேனல்கள் போன்ற எக்கச்சக்க சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இந்த வோடபோன் ஐடியா ரெட் எக்ஸ் (Vodafone Idea RED X) திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 1101 திட்ட விவரங்கள் (Vodafone Idea 1101 Plan Details): இதுவொரு போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டமாகும். இந்த திட்டத்தில் டேட்டாவுக்கு லிமிட் கிடையாது. வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் (National Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 3000 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. இந்த வோடபோன் ஐடியா திட்டமானது, ஓடிடி நன்மைகளில் (OTT Benefits) மிரளவிட்டுள்ளது.
6 மாதங்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது. அதேபோல 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 12 மாதங்களுக்கான சோனிலிவ் (SonyLIV) சந்தாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுபோக சன்நெக்ஸ்ட் (SunNXT) ஆப் சந்தாவானது, 1 வருடத்துக்கு கிடைக்கிறது. மேலும், விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) சந்தா மூலம் லைவ் டிவி சேனல் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல விஐ கேம்ஸ் (Vi Games) மற்றும் ஹங்கமா மியூசிக் (Hungama Music) சலுகை வருகிறது.
இந்த சலுகைகளே திட்டத்தின் பட்ஜெட்டை விட கூடுதல் நன்மைகளை கொண்டிருக்கின்றன. ஆனால், இவ்வளவு சலுகைகளுக்கு பிறகும் பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. ஆகவே, மேக் மை ட்ரிப் ஹோட்டல் (MakeMyTrip Hotel) சலுகை மூலம் ஹோட்டல் புக்கிங்கில் அதிகபட்சமாக ரூ 5000 மதிப்பில் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.
அதேபோல மேக் மை ட்ரிப் ஆப் மூலம் விமான டிக்கெட் புக் செய்யும் வோடபோன் கஸ்டமர்களுக்கு அதிகபட்சமாக ரூ 5000 மதிப்பில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. 7 நாட்களுக்கு இன்டர்நேஷனல் ரோமிங் (International Roaming) சலுகை கொடுக்கப்படுகிறது. விமான நிலைய லவுஞ்ச் அணுகல் (Airport Lounge Access) கிடைக்கிறது.
இந்த அணுகலை 1 இன்டர்நேஷனல் உள்பட வருடத்துக்கு 4 முறை பயன்படுத்தலாம். 2 காலாண்டு மெம்பர்ஷிப் கூப்பன்களுடன் ஒரு வருட ஸ்விக்கி அணுகல் (Swiggy Access) கிடைக்கிறது. அதேபோல 2 காலாண்டு மெம்பர்ஷிப் கூப்பன்களுடன் ஈஸிடினர் அணுகல் (EazyDiner) மற்றும் ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) கிடைக்கிறது.
ஈஸ்மைட்ரிப் மூலம் மாதத்துக்கு ரூ 750 மதிப்பில் ரிட்டர்ன் விமான டிக்கெட் சலுகை கொடுக்கப்படுகிறது. மேற்கூறிய அவ்வளவு சலுகைகளும் ஒரே திட்டத்தில் அதுவும் ரூ 1101 மதிப்பில் கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற சலுகைகள் பிஎஸ்என்எஸ் நிறுவனம் கூட கொடுக்கவில்லை. கஸ்டமர்களை தக்கவைக்க இந்த ஒரு திட்டத்தில் இப்படி லாபம் பார்க்காமல் சலுகைகளை கொடுத்துள்ளது வோடபோன்.


Click it and Unblock the Notifications








