vodafone-ன் இரட்டை தரவு சலுகைகள்: வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு!
வோடபோன் நிறுவனத்தின் இரட்டைத் தரவு சலுகைகளில் வாடிக்கையாளர்கள் சிறந்த வரவேற்பு இருப்பதையடுத்து அந்த திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இரட்டை தரவு திட்டங்கள்
வோடபோன் நிறுவனம் இரட்டை தரவு திட்டங்களை அளித்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல்வேரு சலுகைகளை வோடபோன் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. முன்னதாக வோடபோன் பெரிதளவு எந்த திட்டத்தை அறிவிக்கவில்லை என்றாலும் தற்போது மூன்றே திட்டத்தில் தங்களது வாடிக்கையாளர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

மூன்று ஆகச்சிறந்த திட்டங்கள்
வோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மூன்று ஆகச்சிறந்த திட்டங்களை குறித்து பார்க்கலாம். இந்த திட்டத்தில் வோபோன் நிர்ணயித்த விலையானது ரூ. 249, ரூ.399 மற்றும் ரூ.599 ஆகிய விலையில் வழங்குகிறது.

கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா
இந்த மூன்று திட்டத்தின் காலவரையறைகள் வேறுவேறாக இருந்தாலும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சுமார் முன்னதாக 1.5 ஜிபி டேட்டாக்களை வழங்குகிறது. அதேபோல் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டாவுடன் மேலும் 1.5 ஜிபி டேட்டா என 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.249-க்கு வழங்கும் திட்டம்
ரூ.249-க்கு வழங்கும் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபியோடு கூடுதலாக 1.5 ஜிபி வழங்கி மொத்தம் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு ஜீ5 சப்ஸ்க்ரைப்ஷன் வசதியும் கிடைக்கிறது. அதோபோல் வோடபோன் ப்ளே சப்ஸ்க்ரைப்ஷன் ரூ.499-க்கு சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.399-க்கு வழங்கும் திட்டம்
ரூ.399-க்கு வழங்கும் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபியோடு கூடுதலாக 1.5 ஜிபி வழங்கி மொத்தம் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு ஜீ5 சப்ஸ்க்ரைப்ஷன் வசதியும் கிடைக்கிறது. அதேபோல் வோடபோன் ப்ளே சப்ஸ்க்ரைப்ஷன் ரூ.499-க்கு சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.599-க்கு வழங்கும் திட்டம்
ரூ.599-க்கு வழங்கும் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபியோடு கூடுதலாக 1.5 ஜிபி வழங்கி மொத்தம் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு ஜீ5 சப்ஸ்க்ரைப்ஷன் வசதியும் கிடைக்கிறது. அதேபோல் வோடபோன் ப்ளே சப்ஸ்க்ரைப்ஷன் ரூ.499-க்கு சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு 3 ஜிபி அதிவேக தரவு
ரூ. 398 திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி அதிவேக தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. அதோடு 28 எஸ்எம்எஸ்களை 28 நாட்கள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்படுகிறது. கூடுதலாக, வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 க்கான இலவச அணுகலும் திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரங்கள்
மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரங்களில் ரூ.299, ரூ.449 மற்றும் ரூ .699 ஆகிய மூன்று திட்டங்களில் ஒரு நாளைக்கு மூன்று ஜிபி என பல்வேறு சலுகைகளோடு சிறந்த திட்டங்களை வழங்குவதாக தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications