சரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.! ஜியோ ஓரம்போ.
அன்மையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிமடத்திற்கு 6பைசா என்கிற கட்டணத்தை நிர்ணயம் செய்தது, இது ஜியோ மீதான வெறுப்பை கொண்டுவந்துவிட்டது என்று தான் கூறவேண்ம். இந்நிலையல் இந்த சரியான நேரத்தை பயன்படுத்தி வோடபோன் நிறுவனம் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

டபுள் டேட்டா நன்மைகளை அறிவித்துள்ளது
அது என்னவென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட வோடாபோனின் தேரத்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டபுள் டேட்டா நன்மைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன?
செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்...

ரூ.199 மற்றும் ரூ.399
அதாவது வோடாபோன் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள சலுகைகளை ரூ.199 மற்றும் ரூ.399 திட்டங்களில் வழங்கத் தொடங்கியுள்ளது. கண்டிப்பாக இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவித்துள்ளது.

வோடாபோன் ரூ.199-திட்டம்
வோடாபோன் நிறுவனத்தின் டபுள் டேட்டா சலுகையை பெறும் ப்ரீபெய்ட் திட்டமான ரூ.199-ஆனது இப்போது 84ஜிபி அளிவலான டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வோடாபோனின் இந்த ரூ.199-ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பு தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கி வந்தது.
தற்சமயம் அறிவிக்கப்பட்ட சலுகையின் அடிப்படையில் 1.5ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 28நாட்கள் ஆகும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 42ஜிபியில் இருந்து 84ஜிபி-ஆக மாறியுள்ளது.

வோடபோன் ரூ.399 திட்டம்
வோடபோனின் ரூ.399-திட்டம் ஆனது முன்னதாக ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கியது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட புதிய சலுகையின் மூலம் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டா நன்மையுடன் வருகிறது.
பின்பு இந்த திட்டத்தின் செல்படியாகும் காலம் 84நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 84ஜிபியில் இருந்து 168ஜிபி-ஆக மாறியுள்ளது.
மேலும் இந்த ரூ.399-திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, தெலுங்கானா, கர்நாடகா
வோடாபோன் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள சலுகையானது ஆந்திரா, சென்னை, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா,மும்பை போன்ற வட்டங்களில் அனுக கிடைக்கும் எனத் டெலிகாம்டால்க் வலைதளம் கூறியுள்ளது. பின்பு வோடபோன் அறிவித்துள்ள இந்த புதிய சலுகை எப்போது முடிவடையும் என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

வலைத்தளம்
வோடாபோன் அறிவித்துள்ள இந்த இரண்டு திட்டங்கள், மொபைல் ஆப் மற்றும் மொபைல் வெப்சைட் வழியாகVodafone Play content-ற்கான இலவச அணுகல் கிடைக்கும் . குறிப்பாக பயனர்கள் கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கும் இந்த திட்டங்களை பெற மொபைல் எண்ணை வோடாபோன் வலைத்தளம் அல்லது மொபைல் ஆப் பயன்பாட்டில் உள்ளிட வேண்டும். பின்னர் இந்த திட்டங்கள் recomands plans பிரிவின் கீழ் காணப்படுவதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications