Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து! ஆன்லைனில் அம்பலமான அட்ரெஸ்கள்!

|

ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள் மற்றும் நஷ்டங்களுக்கு நடுவே தத்தி தடுமாறி "வண்டி ஒட்டிக்கொண்டிருக்கும்" வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்திற்கு மேலுமொரு பெரிய அடி விழுந்துள்ளது!

நஷ்டத்தையும், விமர்சனங்களையும் கூட சமாளித்து விடலாம் (குறிப்பாக 5ஜி சேவை அறிமுகமான பின்னர்), ஆனால் மில்லியன் கணக்கான கஸ்டமர்களின் விவரங்களை அம்பலப்படுத்தி உள்ள வோடாபோன் டேட்டா லீக் (Vodafone Data Leak) சம்பவத்தில் இருந்து இந்நிறுவனம் எப்படி தப்பிக்க போகிறதோ? தெரியவில்லை!

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

Vi என்று சுருக்கமான அறியப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது ஒரு மாபெரும் டேட்டா லீக் சம்பவத்தில் சிக்கி உள்ளது.

அதாவது வோடபோன் ஐடியா நிறுவனத்தின், சுமார் 20 மில்லியன் வாடிக்கையாளர்களின் கால் டேட்டா ரெக்கார்ட்ஸ் (Call Data Records) மற்றும் சந்தாதாரரின் முழுப் பெயர் உட்பட பல விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளதாகவும், அந்த விவரங்கள் சைபர் குற்றவாளிகளால் அணுகப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

குற்றம் சொல்லும் CyberX9.. மறுக்கும் Vodafone Idea!

குற்றம் சொல்லும் CyberX9.. மறுக்கும் Vodafone Idea!

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கீழ் சேவைகளை பெறும் கஸ்டமர்களின் "விவரங்கள்" ஆன்லைனில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக சைபர்-செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனமான CyberX9 கூற, அதை முற்றிலுமாக மறுத்துள்ளது- தனியார் டெலிகாம் நிறுவனமான - வோடபோன் ஐடியா!

சைபர்-பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான CyberX9-யின் கூற்றுப்படி, நிறுவனத்தின் சிஸ்டம்களில் உள்ள Vulnerabilities (பிழைகள் / பாதிப்புகள்) காரணமாக 20.6 மில்லியன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் கால் டேட்டா ரெக்கார்ட்ஸ் லீக் ஆகி உள்ளது.

விலாசம், எஸ்எம்எஸ், ரோமிங் விவரங்கள் என

விலாசம், எஸ்எம்எஸ், ரோமிங் விவரங்கள் என "எல்லாமே" லீக்!

ஒருபக்கம் இந்த டேட்டா லீக்கின் கீழ் பல கஸ்டமர்களின் கால் டைம் (Call time), ட்யூரேஷன் ஆப் தி கால் (Duration of the call), எங்கிருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டது, சந்தாதாரரின் முழுப்பெயர், விலாசம், எஸ்எம்எஸ் விவரங்கள் மற்றும் ரோமிங் விவரங்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படும் CyberX9-யின் அறிக்கை வெளியாகி உள்ளது!

மறுபக்கம், விஐ நிறுவனம் "எந்த விதமான டேட்டாவும் லீக் ஆகவில்லை, இது முற்றிலும் தவறான அறிக்கை" என்று திட்டவட்டமாக கூறி உள்ளது.

பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?பதட்டத்தில் Windows பயனர்கள்.. அடிச்சி புடிச்சி Uninstall பண்றாங்க! ஏன்?

Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து!

Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து!

"இது மில்லியன் கணக்கான வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களின் ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி-ஐ நிரந்தரமாக பாதிக்கும்" என்று CyberX9 தெரிவித்துள்ளது.

ஏனெனில் இந்த டேட்டா லீக்கின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக வோடாபோனின் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்கள் "அம்பலப்படுத்தபட்டுள்ளதாகவும்", அவைகள் பெரும்பாலான ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கலாம் என்றும் CyberX9 நம்புகிறது!

கம்பி கட்டும் கதைகளை சொல்லும் வோடாபோன்!

கம்பி கட்டும் கதைகளை சொல்லும் வோடாபோன்!

பில்லிங் கம்யூனிகேஷனில் தான் சாத்தியமான பாதிப்பு இருந்ததாகவும், அது உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும், டேட்டா லீக் போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும், அதை உறுதிப்படுத்த முழுமையான தடயவியல் பகுப்பாய்வு நடத்தப்பட்டதாகவும் வோடாபோன் ஐடியா நிறுவனம் கூறி உள்ளது!

இருப்பினும், சைபர்எக்ஸ்9 ஆனது, தடயவியல் தணிக்கை (Forensic Audit) நடத்தியதாக வோடாபோன் ஐடியா நிறுவனம் கூறுவது மிகவும் அபத்தமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது!

விற்பனைக்கு BSNL! இது வெறும் ஆரம்பம் தான்.. அடுத்த 2025-க்குள்ள?விற்பனைக்கு BSNL! இது வெறும் ஆரம்பம் தான்.. அடுத்த 2025-க்குள்ள?

Best Mobiles in India

English summary
Vodafone Data Leak 20 Million Customers Details Exposed Online Accessed by Cyber Criminals, CyberX9 Says.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X