1ஜிபி டேட்டா: இலவச வாய்ஸ் கால்-ஒரு வருட வேலிடிட்டி கொண்ட வோடபோனின் புதிய திட்டம்.!
வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்ததை தொடர்ந்து, இப்போது, வோடபோன் நிறுவனமும் தனது புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்
இருக்கும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

வோடபோன் நிறுவனம் இப்போது அதன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,699-திட்டத்தில் புத்தம் புதிய சலுகையை அறிவித்துள்ளது, மேலும் ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைந்தபின் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து இது
போன்ற புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.1,699-திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

ஏர்டெல் :
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.1,699 திட்டம் வோடபோனின் புதிய திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது, அதன்படி ஏர்டெல் ரூ.1,699 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவை, அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால்ஸ் சேவை மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் என 365 நாட்கள் வேலிடிட்டியுடன் மலிவான விலையில் இத்திட்டம் கிடைக்கிறது. இலவச காலர் டியூன் மற்றும் அன்லிமிடெட் பாடல்கள் மாதம் போன்ற சேவைகள் மட்டுமே பிஎஸ்என்எல் இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல், வோடபோன், மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்று டிஜிட்டல் சேவைகள் எதுவும் இலவசமாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோவின் இத்திட்டத்தின் கீழ் பயனருக்குத் தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா சேவையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவையும் வழங்கப்படுகிறது. அத்துடன் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-களுடன் மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி பயனைப் பயனருக்கு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 365 நாட்களுக்கு 547.5 ஜிபி டேட்டா சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications