இனி சென்னையில் 4ஜி-வோடபோன்.!
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான வோடபோன் சென்னையில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.அதுகுறித்து ஓர் பார்வை.
இப்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுக்காக தமது அனைத்து சேவைகளிலும் சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன.இதற்கான காரணம் ஜியோ என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.அந்த வகையில் தனது அறிமுகத்தின்போதே அதிரடியான சலுகைகளுடன் களமிறங்கி பிற நெட்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தையும் மிரளச் செய்திருக்கிறது ஜியோ.
அதன் போட்டியினை இது செய்ய இயலாமல் அனைத்து நெட்ஒர்க் நிறுவனங்களும் தாமும் பல வகையிலான சலுகைகள் உள்ளிட்ட வற்றை அறிமுகப்படுத்துகின்றன. இப்போது வோடாபோனும் தமது வாடிக்கையாளர்களுக்காக வசதியினை செய்கிறது.அது என்னவெனப் பார்ப்போம்.

4ஜி நெட்ஒர்க்:
இப்போது அனைத்து நிறுவனங்களும் தமது பிற சேவைகளில் விலைகுறைப்பு உள்ளிட்டவற்றை செய்துள்ளது போலவே டேட்டா நெட்ஒர்க் சேவையிலும் அதிரடியான விலைகுறைப்பு உள்ளிட்டவற்றை செய்கின்றன.இத்தகைய நிறுவனங்கள் செய்கின்ற மற்றுமோர் விடயம் தமது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வேகத்தில் டேட்டா சேவையை வழங்குதல்.காரணம் இந்த 4ஜி டேட்டா மூலம் இணையத்தினை வேகமாகவும்,மகிழ்ச்சியாகவும் உபயோகிக்க இயலும் என்பதே.

சென்னை:
திங்கட்கிழமை அன்று சென்னையில் தமது 4ஜி நெட்ஒர்க் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது வோடபோன்.கோயம்புத்தூர்,திருப்பூர்,மதுரை,புதுச்சேரி,திருநெல்வேலி,திருச்சி,ஓசூர்,சேலம்,ஈரோடு,வேலூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த சேவையினை அறிமுகப்படுத்திய பிறகு சென்னையில் பெருநகரங்களில் மார்ச் 2017க்குள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.இப்போது இந்த சேவையானது 17தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன்:
சென்னை என்பது எண்கள் நிறுவவன வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த அளவு பங்கு வகிக்கிறது.புதுச்சேரியுடன் சேர்த்து 7000 கோடி முதலீடு செய்துள்ளோம்.சிறந்த நெட்ஒர்க் சேவையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கமென்ன தமிழ்நாட்டின் விற்பனை மேலாளர் முரளி தெரிவித்துள்ளார்.மேலும் கைரேகை பெரும் முறைகளும் விரைவில் வோடபோன் சிம் விற்பனையின் போது மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க


Click it and Unblock the Notifications