இதான் Vodafone: ரூ.999 இலவச சலுகை, ரூ.50 கேஷ்பேக், தினசரி 2 ஜிபி டேட்டா., அன்லிமிட்டெட் வாய்ஸ்கால்!

|

Vodafone நிறுவனம் அறிவித்துள்ள இரட்டிப்பு சலுகை இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை என்றாலும் பல்வேறு சலுகையோடு கூடிய திட்டமும் வழங்கப்படும் கேஷ்பேக் குறித்தும் பார்க்கலாம்.

இரட்டிப்பு டேட்டா சலுகை

இரட்டிப்பு டேட்டா சலுகை

வோடபோன் நிறுவனம் முன்னதாக தங்களது திட்டங்களில் இரட்டிப்பு டேட்டா சலுகையை அறிவித்தது. இருப்பினும் அந்த சலுகை சில வட்டங்களில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது முந்தைய சலுகையை போன்றே புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டத்திலும் இருமடங்கு டேட்டா சலுகையை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்குகிறது. அந்த வகையில் இந்த சலுகை அனைத்து வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.

வோடபோன் இந்தியா வலைதளத்தின் படி

வோடபோன் இந்தியா வலைதளத்தின் படி

வோடபோன் இந்தியா வலைதளத்தின் படி ரூ.299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் திட்டங்களில் இருமடங்கு டேட்டாவை வழங்குகிறது, இதே சலுகை ரூ.399 மற்றும் ரூ.599 ரீசார்ஜ் திட்டங்களிலும் வழங்கப்படுகிறது. முன்னதாக மார்ச் மாத துவகத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!

2 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது

2 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பலன்களை பொருத்தவரை ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் திட்டங்களின் சலுகைளில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.299-பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமா 4ஜிபி டேட்டா கிடைக்கும், இதனுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

4 ஜிபி அதிவேக டேட்டா

4 ஜிபி அதிவேக டேட்டா

அதேபோல் வோடபோனின் ரூ.449-பிரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 4ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 56நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.669-ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.669-ப்ரீபெய்ட் திட்டம்

மேலும் வோடபோனின் ரூ.669-ப்ரீபெய்ட் திட்டத்தல் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 4ஜிபி டேட்டாவுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது

குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது

குறிப்பாக இந்த இருமடங்கு டேட்டா சலுகை ஆனது டெல்லி,மத்தியப் பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொருத்தவரை இரட்டிப்பு சலுகை அறிவிக்கவில்லை

தமிழகத்தை பொருத்தவரை இரட்டிப்பு சலுகை அறிவிக்கவில்லை

இருப்பினும் தமிழகத்தில் ரூ.249-க்கு கிடைக்கும் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.299-க்கு கிடைக்கும் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதாவது அனைத்து திட்டத்திலும் தமிழகத்தை பொருத்தவரை இரட்டிப்பு சலுகை இன்னும் அறிவிக்கவில்லை.

ரூ.999 மதிப்புள்ள ஜீ5 இலவச சந்தா

ரூ.999 மதிப்புள்ள ஜீ5 இலவச சந்தா

அதேபோல் இந்த திட்டத்தில், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் பயன்பாடுகளுக்கான சந்தாவையும் வழங்கும். வோடபோன் பிளே நன்மைகள் திட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன. உண்மையில் வோடபோன் பிளேயின் விலை 499 ரூபாய் ஆகும். இது தவிர, ஜீ5 சந்தாவும் இந்த திட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது, இதன் விலை ரூ.999 ஆகும்.

Tatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா?Tatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா?

 Paytm-ஐ பயன்படுத்தினால் ரூ.50 கேஷ்பேக்

Paytm-ஐ பயன்படுத்தினால் ரூ.50 கேஷ்பேக்

vodafone.in வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தின் தகவல்களின்படி, ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யும் போது நீங்கள் Paytm-ஐ பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone announced rs.50 cashback, daily 2 gb data and free voice calling plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X