வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.! டிராய்.!

|

செப்டம்பர் மாதம் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் கணிசமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. மேலும் இதைப் பற்றிய விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.

தற்சமயம் வந்த தகவல்களின்படி கடந்த செப்டம்பர் மாதம் வோடபோன் ஐடியா நிறுவனம் 25லட்சத்து 70ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37கோடியே 24லட்சமாக குறைந்துள்ளது.

 ஏர்டெல்

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் 23லட்சத்து 80ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில் அதன் வாடிக்கையாளர் மொத்த எண்ணிக்கை 32கோடியே 55லட்சமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை மேல் சோதனை: சோதனை மேல் சோதனை: "ஜியோ" கட்டணம் மேலும் உயர்வு

வோடபோன்

மேலும் செப்டம்பர் மாத சந்தைப் பங்கு நிலவரத்தில் வோடபோன் இடியா 31.73சதவிகிதம், ரிலையன்ஸ் ஜியோ 30.26சதிவிகிதம் ஏர்டெல் 27.74சதவிகிதம் ஆக இருந்தது. பிற நிறுவனங்கள் 10.27சதவிகிதம் சந்தை பங்கை கொண்டுள்ளது என்பது குறிபபிட்த்தக்கது. மேலும் வோடபோன் அன்மையில் அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

 69லட்சத்து 83 ஆயரம்

ஆனால் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 69லட்சத்து 83 ஆயிரம் அதிகரித்து 35கோடியே 52லட்சத்தை தொட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 7லட்சத்து 37ஆயிரம் அதிகரித்து 11கோடியே 69லட்சமாக உள்ளது.

 மேலும் வோடபோன்

மேலும் செப்டம்பர் மாத சந்தைப் பங்கு நிலவரத்தில் வோடபோன் இடியா 31.73சதவிகிதம், ரிலையன்ஸ் ஜியோ 30.26சதிவிகிதம் ஏர்டெல் 27.74சதவிகிதம் ஆக இருந்தது. பிற நிறுவனங்கள் 10.27சதவிகிதம் சந்தை பங்கை கொண்டுள்ளது என்பது குறிபபிட்த்தக்கது. மேலும் வோடபோன் அன்மையில் அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.9-சாசெட் பேக்

வோடபோன் ரூ.9-சாசெட் பேக்

வோடபோன் ரூ.9-சாசெட் பேக்-ல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100எம்பி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் ஒரே ஒரு நாளுக்கு மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.21-சாசெட் பேக்

வோடபோன் ரூ.21-சாசெட் பேக்

வோடபோன் ரூ.21-சாசெட் பேக்-ல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 150எம்பி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இரண்டு நாட்களுக்கு மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.51-சாசெட் பேக்

வோடபோன் ரூ.51-சாசெட் பேக்

வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த ரூ.51-சாசெட் பேக் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி
டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7நாட்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio adds 70 lakh users in September; Voda Idea, Airtel lose over 49 lakh subscribers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X