இனி விஎல்சி பிளேயரில் 'சுழட்டி சுழட்டி' வீடியோ பார்க்கலாம்.!
விஎல்சி மீடியா பிளேயரில் இப்போது 360 டிகிரி வீடியோக்கள் மற்றும் படங்களை ப்ளே செய்ய இயலும்.
நீங்கள் வீடியோலானின் (VideoLAN) விஎல்சி மீடியா பிளேயரின் ஒரு விசிறி அல்லது பயனாளர் என்றால் உங்களுக்கான ஒரு நல்ல செய்தி தான் இது.

ஏற்கனவே எந்த வடிவத்தில் உள்ள மீடியா கோப்புகளையும் ஆதரிக்கும் விஎல்சி மீடியா பிளேயர் இப்போது ஒரு பெரிய சுவாரஸ்யமான அம்சம்தனை ஆதரிக்கிறது. அதாவது வீடியோலானின் விஎல்சி மீடியா பிளேயர் இப்போது 360 டிகிரி வீடியோ வடிவத்தை ஆதரிக்கிறது.

புதிய அம்சம் கொண்டு பயனர்களால் 360 டிகிரி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அத்துடன் பனோரமா படங்களையும் ப்ளே செய்ய முடியும். கூடுதலாக, விஎல்சி திறந்த மூலம் மற்றும் க்ராஸ் பிளாட்பார்ம் பார்மட்கள் (ஓப்பன்ஜிஎல் மற்றும் டைரக்ட்3டி11) ஆகியவைகளையும் ஆதரிக்கவுள்ளது. 360 டிகிரி கோண வீடியோக்களை மவுஸ் அல்லது கீபோர்ட் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இதுவொரு விஎல்சி டெக்கினிக்கல் ப்ரிவியூ என்பதை பயனர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த முன்னோட்டம் தற்போது விண்டோஸ் மற்றும் மேக் ஆகிய இரண்டு பயனகளுக்கும் கிடைக்கும்.இந்த முன்னோட்ட முயற்சியானது ஒரு 'பிட்' அளவு தரமற்றதாக அலல்து நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போக வாய்ப்புண்டு. ஆனால் விஎல்சி பிரகாசமான பக்கத்தில் ஒரு புதிய பிரிவில் நுழைய முயற்சிக்கிறது என்பது மட்டும் உறுதி.
மேலும் படிக்க

விஎல்சி மீடியா பிளேயர் உதவியுடன் பெரிய வீடியோக்களை கம்ப்ரஸ் செய்வது எப்படி.?


Click it and Unblock the Notifications