இந்தியாவில் தடை செய்யப்பட்ட VLC Media Player: ஹேக்கிங் குழு லீலை- சைபர் தாக்குதல் காரணமா?

|

இந்தியாவில் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை 2 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நிறுவனத்தின் தரப்பிலோ அல்லது இந்திய அரசு தரப்பிலோ இந்த தடை குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

VLC மீடியா பிளேயர் தடை செய்ய காரணம் என்ன?

VLC மீடியா பிளேயர் தடை செய்ய காரணம் என்ன?

VideoLAN திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட VLC மீடியா பிளேயர், இனி இந்தியாவில் வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஎல்சி மீடியா பிளேயர் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மிகவும் பிரபலமாக இருந்த VLC மீடியா பிளேயர் தடை செய்ய காரணம் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.

பிரதான வீடியோ பிளேயர்களில் ஒன்று

பிரதான வீடியோ பிளேயர்களில் ஒன்று

VideoLAN திட்டத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான சாஃப்ட்வேர் மற்றும் ஸ்ட்ரீமிங் மீடியா சர்வர் தான் VLC மீடியா பிளேயர்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான வீடியோ பிளேயர்களில் விஎல்சி மீடியா பிளேயர் பிரதான ஒன்று. இந்த நிலையில் இந்தியாவில் விஎல்சி மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுனா முடியும்., இந்தியானா முடியாதா?- Smartphone, iPhoneகளுக்கு விரைவில் வரும் செக்!வெளிநாடுனா முடியும்., இந்தியானா முடியாதா?- Smartphone, iPhoneகளுக்கு விரைவில் வரும் செக்!

அதிகாரப்பூர்வ விவரம் வெளியிடவில்லை

அதிகாரப்பூர்வ விவரம் வெளியிடவில்லை

இதுகுறித்த MediaNama இன் அறிக்கையை விரிவாக பார்க்கலாம், இந்தியாவில் விஎல்சி மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டிருக்கிறது.

நிறுவனமோ அல்லது இந்திய அரசாங்கமோ இந்த தடை குறித்த எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

சைபர் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

சீனா ஆதரவு ஹேக்கிங் குழுவான சிகாடா சைபர் தாக்குதல்களுக்கு இந்த தளத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது, இதுவே இந்தியாவில் VLC மீடியா பிளேயர் தடைசெய்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு சீனா ஆதரவு ஹேக்கிங் குழுவான Cicada சைபர் தாக்குதலுக்கான ஒரு பகுதியாக விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி இருக்கிறது.

சிகாடா தீங்கிழைக்கும் ஒரு தீம்பொருளை விஎல்சி மீடியா பிளேயரில் பயன்படுத்தி சைபர் தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் பயனர் பகிர்ந்த தகவல்

இது ஒரு சராசரி தடை என்பதால், அந்த நிறுவனமோ அல்லது இந்திய அரசாங்கமோ இந்த தடை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

விஎல்சி தடை குறித்த ட்விட்டரில் சில பயனர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, ககன்தீப் சப்ரா என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், VLC இணையதளத்தின் ஸ்கிரீன்ஷாட்டை ட்வீட் செய்துள்ளார். அதில் "ஐடி சட்டம் 2000 இன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின்படி இணையதளம் தடை செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

VLC மீடியா பிளேயர் முழுமையாக தடை

VLC மீடியா பிளேயர் முழுமையாக தடை

தற்போது நாட்டில் VLC மீடியா பிளேயர் இணையதளம் மற்றும் பதிவிறக்க இணைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது.

இனி எந்தவொரு தேவைக்கும் இந்தியாவில் விஎல்சி தளத்தை அணுக முடியாது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. மேலும் ACTFibernet, Jio, Vodafone-idea (VI) உள்ளிட்ட பல முக்கிய ISPகளில் VLC மீடியா பிளேயர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Samsung Vs Xiaomi: ஒரே நேரத்தில் பிரமாண்ட போட்டி- எந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பெஸ்ட்?Samsung Vs Xiaomi: ஒரே நேரத்தில் பிரமாண்ட போட்டி- எந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பெஸ்ட்?

தொடரும் நடவடிக்கை

தொடரும் நடவடிக்கை

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் பப்ஜி மொபைல், டிக்டாக், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீனப் பயன்பாடுகளை மத்திய அரசு தடை செய்தது.

பாதுகாப்பு நிலை கருதி அவ்வப்போது இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது விஎல்சி மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியர்களின் தரவு பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக உள்ள பயன்பாடுகளை கண்டிறிந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
VLC Media Player Banned in India- Indian Government, Company Not Reveals about this

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X